TNPSC  பொது அறிவு -2022..!!!

மருத்துவ மூலிகைத்தாவரங்கள்:


🌟 மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை 

- மூலிகைகள் என்கிறோம்.


🌟 கிருமி நாசினி , உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை 

- மஞ்சள்.


🌟 பசியைத் தூண்டுவதற்கும், செரிமானம் இன்மையை நீக்குவதற்கும் பயன்படும் மூலிகை 

- பிரண்டை.


🌟 தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை 

- மிளகு.


🌟 செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.


🌟 வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை

 - வசம்பு


🌟 சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.


🌟 கிருமி நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை

 - வேம்பு.


🌟 மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை 

- தூதுவளை.


🌟 மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை

 - கீழாநெல்லி.


🌟 வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை எது ? 

- ஓமவல்லி.


🌟 வாய்ப்புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை

 - நெல்லிக்காய்.


🌟 இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய்

 - நெல்லி


🌟 எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது

 - துவரை.