ஏழாம் வகுப்பு தமிழ்
புத்தக வினா விடைகள் :
இயல் 1: அமுதத் தமிழ்
1.1. எங்கள் தமிழ்
I. சொல்லும் பொருளும்
1. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
2. குறி – குறிக்கோள்
3. விரதம் – நோன்பு
4. பொழிகிற – தருகின்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.
A. வழி
B. குறிக்கோள்
C. கொள்கை
D.அறம்
2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
A. குரல் + யாகும்
B. குரல் + ஆகும்
C. குர + லாகும்
D. குர + ஆகும்
3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
A. வான்ஒலி
B. வானொலி
C. வாவொலி
D. வானெலி
III. நயம் அறிக
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
A. அருள்நெறி – அதுவே
B. கொல்லா – கொள்கை
C. எல்லா – என்றும்
D. அன்பும் – அச்சம்,
E. இன்புறவே – இசைந்திடும்
2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
1. அருள் – பொருள்
2. தரலாகும் – குரலாகும்
3. புகழாது – இகழாது
4. யாரையும் – தாரையும்
5. இன்புறவே – அன்பறமே
6. அன்பும் – இன்பம்
3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
1. தரலாகும் – குரலாகும்
2. ஊக்கிவிடும் – போக்கிவிடும்
3. வானொலியாம் –தேன் மொழியாம்
4. புகழாது – இகழாது.
""""""""""""""""""”"
Bright Zoom Tamil,
7std Tamil ,
Tamil Notes,
I. சொல்லும் பொருளும்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
0 Comments