Tamil Nadu 8th Standard,
1st Term Tamil ,
Book Back Questions & Tamil Guide,
8th Standard Tamil Book 1st Term Solution 2022,
எட்டாம் வகுப்பு 1.தமிழ் இன்பம் பகுதி 1
1.1 தமிழ்மொழி வாழ்த்து
I. சொல்லும் பொருளும்
நிரந்தரம் – காலம் முழுமையும்
வண்மொழி – வளமிக்கமொழி
வைப்பு – நிலப்பகுதி
இசை – புகழ்
சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
தொல்லை – பழமை, துன்பம்
Il. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
A. வைப்பு
B. கடல்
C. பரவை
D. ஆழி
விடை : A. வைப்பு
2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ ( என்றென்றும் பிரித்து எழுதுக )
A. என் + றென்றும்
B. என்று + என்றும்
C. என்றும் + என்றும்
D. என் + என்றும்
விடை : B. என்று + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
A. வான + மளந்தது
B. வான் + அளந்தது
C. வானம் + அளந்தது
D. வான் + மளந்தது
விடை : C. வானம் + அளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
A. அறிந்ததுஅனைத்தும்
B. அறிந்தனைத்தும்
C. அறிந்ததனைத்தும்
D. அறிந்துனைத்தும்
விடை : C. அறிந்ததனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
A. வானம்அறிந்து
B. வான்அறிந்த
C. வானமறிந்த
D. வான்மறிந்
விடை : C. வானமறிந்த
IIl. தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
மோனைச் சொற்கள் :
வாழ்க –வாழிய
எங்கள் –என்றென்றும்
வண்மொழி –வளர்மொழி
அகன்று –அறிந்த
0 Comments