Tamil Nadu 8th Standard,

1st Term Tamil ,

Book Back Questions & Tamil Guide,

8th Standard Tamil Book 1st Term Solution 2022,

எட்டாம் வகுப்பு 1.தமிழ் இன்பம் பகுதி 2

1.2 தமிழ்மொழி மரபு

I.சொல்லும் பொருளும்

விசும்பு – வானம்

மரபு – வழக்கம்

மயக்கம் – கலவை

திரிதல் – மாறுபடுதல்

இருதிணை – உயர்திணை, அஃறிணை

செய்யுள் – பாட்டு

வழாஅமை – தவறாமை

தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்


Il. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

A. நிலத்தில்

B. விசும்பில்

C. மரத்தில்

D. நீரில்

விடை : B. விசும்பில்


2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

A. மரபு

B. பொழுது

C. வரவு

D. தகவு

விடை : A. மரபு


3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

A. இரண்டு + திணை

B. இரு + திணை

C. இருவர் + திணை

D. இருந்து + திணை

விடை : A. இரண்டு + திணை


4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________.

A. ஐம் + பால்

B. ஐந்து + பால்

C. ஐம்பது + பால்

D. ஐ + பால்

விடை : B. ஐந்து + பால்


Ill. இளமைப்  பெயர்கள்

புலி -பறழ்

சிங்கம் -குருளை

யானை -கன்று

பசு -கன்று

கரடி -குட்டி

ஒலி மரபு


புலி -உறுமும்

சிங்கம் -முழங்கும்

யானை -பிளிறும்

பசு -கதறும்

கரடி -கத்தும்