TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!!

பொதுத்தமிழ் - கலைகள் 

சிற்பம் - (பகுதி-1)..!!

Bright Zoom Tamil


★கலைகளும் இலக்கியங்களும் உலகிற்கு எவற்றை உணர்த்துவன? 

- ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகம் 

★ கோவில் போலவும், தேர் போலவும் காட்சி அளிக்கும் கடற்கரைக் கோயில் அமைந்துள்ள இடம்?

 - மகாபலிபுரம் 

★ மற்போரில் சிறந்தவர் யார்?

 - நரசிம்மவர்மன்

★ நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர் என்ன?

 - மாமல்லன் 

★ ஒரே பாறையில் செதுக்கிச் செய்யபட்ட, இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் உள்ளதால் இதனை ---------------- கோவில் என்று அழைப்பர்.

 - இரதக் கோவில் 

★ ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு ------------- என்ற பெயர்.

 - பஞ்சபாண்டவர் இரதம்

★ நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

 - ஏழாம் நூற்றாண்டு

★ மாமல்லபுரத்தில் உள்ள சிற்பப் பணி யாருடைய காலத்தில் தொடங்கியது?

 - மகேந்திரவர்மன்

★ மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளாக உருவாக்கப்பட்டவை என மாமல்லன் கூறினார்?

அ) மூன்று தலைமுறை

ஆ) இரண்டு தலைமுறை

இ) நான்கு தலைமுறை

ஈ) ஐந்து தலைமுறை


★ மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் எவை? 

■ அர்ச்சுனன் தபசு

■ கடற்கரைக் கோவில் 

■ பஞ்சபாண்டவர் இரதம் 

■ ஒற்றைக்கல் யானை 

■ குகைக்கோவில் 

■ புலிக்குகை 

■ திருக்கடல் மல்லை

■ கண்ணனின் வெண்ணெய்ப் பந்து 

■ கலங்கரை விளக்கம்


 பொதுத்தமிழ் - கலைகள் 

★ நரசிம்மவர்மனின் தந்தை பெயர் என்ன? 

- மகேந்திரவர்மன் 

★ மனிதர்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் உயிர் உள்ளவை போல எந்த பாறையில் காணப்படுகின்றன?

 - அர்ச்சுணன் தபசு 

★ நரசிம்மவர்மனுக்கு பாறையின் நிழல் எதை போன்று தெரிந்தது? 

- யானை

★ மாமல்லபுரத்தில் உள்ள கோவில் பாறையில் சேதப்படுத்தப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்களை எவ்வாறு அழைப்பர்? 

- புடைப்புச் சிற்பங்கள் 


★ அர்ச்சுனன் தபசு, புடைப்புச் சிற்பங்கள் இந்த இரண்டு பாறைகளிலும் ---------------- க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. 

- 150 

★ மாமல்லபுரம் கோவிலில் ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல் உள்ள சிற்பத்தின் பெயர் என்ன?

 - அர்ச்சுனன் தபசு

★ உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாக செதுக்கப்பட்ட தவம் செய்யும் சிற்பம் யாருடையது?

 - அர்ச்சுனன் 

★அர்ச்சுனன் தபசு பாறையை ---------------- என்று கூறுபவர். 

- பகீரதன் தவம்

★ மழைக்காலத்தில் இரு பறவைகளுக்கு நடுவே நீர் வருவது எதை போன்று உள்ளது? 

- ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல்

★ எந்த விலங்கு தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் மாமல்லபுரத்தில் உள்ளது?

 - மான்