2022 -  TNPSC 
போட்டித் தேர்வுகள்..!!


பொதுத்தமிழ் - இலக்கியம்.!!

புறநானூறு 


★ புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.


★ புறநானூறு  புறம்+நான்கு+நூறு. புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதனால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.


★ புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். அகவற்பாக்களால் ஆனது.


★  புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.


★ இந்நூலின் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.


★  புறநானூற்றின் பாடல்கள் சங்க காலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.


★ இந்நூல் பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.


★ ஒளவையார் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.


★ புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


★ பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் என்பவரும் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


★ புறநானூற்றில் இடம்பெறும் முதல் பாடலான கடவுள் வாழ்த்துப் பாடல் பாடிய புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவராவார்.