2022 -TNPSC போட்டித் தேர்வுகள் -  !!

பொதுத்தமிழ் 

தமிழ் மொழியின் சிறப்புகள் 


(பகுதி-1)!!

★  ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் என்ன? - பழமை 

★  நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது எது? - மொழி

★ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் எது? - தொல்காப்பியம்

★ ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று பாடியவர்? - பாரதியார்

★ ‘தமிழ்’ என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்? - தொல்காப்பியம் 

★  ‘தமிழ்நாடு’ என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்? - சிலப்பதிகாரம் 

★ ‘தமிழன்’ என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்? - அப்பர் தேவாரம்

★ இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய ---------------- தோன்றியிருக்க வேண்டும். - இலக்கண விதிகள்

★ தமிழ் மொழி பெரும்பாலும் ------------------ எழுத்துகளாகவே அமைந்துள்ளன. - வலஞ்சுழி

★ ‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர்? 

- பாரதியார்


★ உயர்திணை எதிர்ச்சொல் ---------------- என அமைய வேண்டும். - தாழ்திணை


★ தாழ்திணை என்று கூறாமல் அதனை எவ்வாறு அழைக்கின்றோம்?

 - அஃறிணை


★ தமிழில் வலஞ்சுழி எழுத்துக்கள் எவை?

 - அ, எ, ஒள, ண, ஞ


★ தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எவை? 

- ட, ய, ழ


★ ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல் எது? 

- சீர்மை 


★ தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் ---------------- குறிப்பிடத்தக்கது.

 - சொற்சிறப்பு 


★ ‘மா’ என்னும் ஒரு சொல் தரும் பொருள்? 

- மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு


★ தமிழுக்கு -------------- என்ற சிறப்பு பெயரும் உண்டு. 

- முத்தமிழ்


★ தமிழ் இலக்கிய வடிவங்கள் எவை?

 - அறிவியல் தமிழ், கணினித்தமிழ் 


★ பொருத்துக. 


1. இலக்கண நூல்கள் - (அ) திருக்குறள், நாலடியார்


2. சங்க இலக்கியங்கள் - (ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை


3. அறநூல்கள் - (இ) தொல்காப்பியம், நன்னூல் 


4. காப்பியங்கள் - (ஈ) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு 


விடை : 1.இ, 2.ஈ, 3.அ, 4.ஆ