TNPSC பொது அறிவு - 2022 வரலாறு வினா விடைகள்!!
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- முகலாயப் பேரரசு!!
01. முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்கள் யார்?
1. பாபர்,
2. ஹுமாயூன்,
3. அக்பர்,
4. ஜஹாங்கீர்,
5. ஷாஜகான்,
6. ஒளரங்கசீப்
02. முதலாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு?
- ஏப்ரல் 21, 1526
03. 11-ஆவது வயது சிறுவனாக இருக்கும் போது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை (தற்போது உஸ்பெக்கிஸ்தானிலுள்ள ஒரு நகரம்) மரபுரிமைச் சொத்தாகப் பெற்றவர் யார்?
- பாபர்
04. கான்வா போர் நடைபெற்ற ஆண்டு?
- 1527
05. வெடிமருந்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்?
- சீனர்கள்
06. பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் --------------------- பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
- பீரங்கிகள்
07. பாபர், மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போர் எது?
- சந்தேரிப் போர்
08. முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் --------------- மொழிகளில் புலமை பெற்றவராவார்.
- பாரசீக மொழி, அராபிய மொழி
09. பாபரின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்பு நு}ல் எது?
- துசுக்-இ-பாபுரி (பாபர் நாமா)
10. ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது?
- காக்ரா போர்
0 Comments