10th Tamil Solutions
1 அன்னை மொழியை
கற்பவை கற்றபின்
1.“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
Answer:
1. நற்றிணை
நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.
BZ.10th Tamil Guide
1.1 அன்னை மொழியை
2. குறுந்தொகை:
நல்ல குறுந்தொகை எனவும் அழைக்கப்படும். குறைந்த அடியளவால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆதலால் குறுந்தொகை என அழைக்கப்பட்டது.
3. ஐங்குறுநூறு:
ஐந்திணைகளைப் பாடும் நூல். குறுகிய பாடலடிகள் கொண்ட நூல்.
4. பதிற்றுப்பத்து:
சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடியது பதிற்றுப்பத்து.
5. பரிபாடல்:
இது அகம், புறம் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.
6. கலித்தொகை:
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல். கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.
7. அகநானூறு :
அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது. களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
8. புறநானூறு:
புறம் சார்ந்த நூல். 400 பாடல்களை உடையது. தமிழரின் வரலாற்றுப்பெட்டகம். இது பழந்தமிழரின்
வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
0 Comments