TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!
பொதுத்தமிழ் - தமிழ்த்தொண்டு
நான்மணிக்கடிகை..!
★ நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
★ விளம்பி என்பது ஊர்ப்பெயர். நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
★ நான்மணிக்கடிகை பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
★ இந்நூலில் உள்ள பாடல் ஒவ்வொன்றிலும் நான்கு மணியான கருத்துகள் கூறப்பட்டுள்ளது.
★ கடிகை என்றால் அணிகலன் என்று பொருள். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
★ ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகிறது.
★ 'காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு" - என்ற வரிகளின் மூலம் மனத்திற்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. அக்கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே என்று கூறுகிறது.
★ இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவர்.
★ இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நு}லில் பல இடங்களில் சமண சமயக் கருத்துகளான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவை கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்றும் கூறுவர்.
★ இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
0 Comments