TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!

பொதுத்தமிழ் - இலக்கியம் 

முதுமொழிக்காஞ்சி 


◆ ஆசிரியர் - மதுரைக் கூடலூர்கிழார்

◆ ஊர் - கூடலூர்

◆ காலம் - சங்க காலத்துக்குப் பின் வாழ்ந்தவர்.

◆ சிறப்பு - இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்.

◆  முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.

◆ பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.

◆ இந்நூல் 'அறவுரைக்கோவை" எனவும் வழங்கப்படுகிறது.

◆ இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.

◆ முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

◆ ஒவ்வொரு பதிகமும் 'ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது.

◆ சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

◆ பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பத்துப் பெயர்கள் :

◆ சிறந்த பத்து

◆ அறிவுப் பத்து

◆ பழியாப் பத்து

◆ துவ்வாப் பத்து

◆ அல்ல பத்து

◆ இல்லைப் பத்து

◆ பொய்ப் பத்து

◆ எளிய பத்து

◆ நல்கூர்ந்த பத்து

◆ தண்டாப் பத்து