TNPSC GK -2022..!

பொது அறிவு வினா விடைகள்!!

தென்னிந்திய வரலாறு (பகுதி - 1)!!

Bright Zoom Tamil,

1. ராஜராஜேஸ்வரம் கோவிலை (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டியவர் யார்? 


- முதலாம் இராஜராஜன்


2. கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சோழ அரசர் யார்? 


- முதலாம் இராஜேந்திரன்


3. மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவிய பாண்டிய மன்னன் யார்? 


- முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்


4. அரசரின் மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார்? 


- யுவராஜன்


5. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் --------------- என்றழைக்கப்பட்டனர். 


- வேளாளர் 


6. சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக -------------------- மூலம் பெறப்பட்டது.


 - நிலவரி


7. நிலவரியானது எவ்வாறு அழைக்கப்பட்டது?


 - காணிக்கடன்


8. சோழர்கள் எந்த மதத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர்? 


- சைவ மதம்


9. எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் யார்?

 - முதலாம் இராஜேந்திரன்


10. முத்துக்குளித்தலோடு தொடர்புடைய கொற்கை, தொடக்கக்காலத்தில் யாருடைய துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது? 


- பாண்டியர்கள்