10 th பொதுத்தமிழ் 

TNPSC,CCSE,TNUSRB 

Notes 2022..!!

சமச்சீர்க் கல்வி 

10 ஆம் வகுப்பு தமிழ் 

இயல் ஒன்று 

அமுத ஊற்று

10 th tamil Mother tongue - Pavalare Perunchithranar

10 ஆம் வகுப்பு தமிழ்

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil


இயல் ஒன்று - அமுத ஊற்று

1.கவிதைப்பேழை

அன்னை மொழியே

     - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

◆ அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

◆  தென்மொழி, தமிழச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணர்வைப் பரப்பியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

◆  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம்.

◆  தமிழின் கருவூலமாக அமைந்த பெருஞ்சித்திரனாரின் படைப்பு திருக்குறள் மெய்ப்பொருளுரை .

◆  பாடப்பகுதியில் உள்ள பாடசிகள் இடம் பெற்றுள்ள தலைப்பு தமிழ்த்தாய் வாழ்த்து முந்துற்றோம் யாண்டும் .

◆  'தென்னன்' என்னும் சொல் பாண்டிய மன்னனைக் குறிக்கிறது .

◆ பாடலில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை.


பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் :

● உலகியல் நூறு

● பாவிக்கொத்து

● நூறாசிரியம்

● கனிச்சாறு

● எண்சுவை எண்பது

● மகபுகுவஞ்சி

● பள்ளிப் பறவைகள்.


சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேணடும்.

          - க. சச்சிதானந்தன்