Tamil Nadu 10th Standard Tamil Book Solutions,

பாடம் 1.2. தமிழ்ச்சொல் வளம்

10ஆம் வகுப்பு தமிழ், 

தமிழ்ச்சொல் வளம் பாட விடைகள் - 2022..!

10th Standard Tamil Book Solutions,Tamil word resource quizzes - 2022 ..!

1.அமுதஊற்று 

1.2. தமிழ்ச்சொல் வளம்

I. பலவுள் தெரிக

1. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –

A. இலையும் சருகும்

B. தோகையும் சண்டும்

C. தாளும் ஓலையும

D. சருகும் சண்டும்

விடை : D. சருகும் சண்டும்


2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –

A. குலை வகை

B. மணி வகை

C. கொழுந்து வகை

D. இலை வகை

விடை : மணி வகை


II. குறு வினா

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.



 

சரியான தொடர்கள் பிழையான தொடர்

இரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.


ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன

பிழைக்கான காரணம்

தாறு – வாழைக்குலை

சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி


III. சிறு வினா

‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1. பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்.

2. வடலி – காட்டில் பனை 

3. வடலியைப் பார்த்தேன்.

4. நாற்று – நெல் நாற்று நட்டேன்

5. கன்று – வாழைக்கன்று நட்டேன்

6. பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையா உள்ளது.


IV. நெடு வினா

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.


குறிப்புச்சட்டம்

அறிமுக உரை

சொல்வளம்

சொல்லாக்கத்திற்கான தேவை

நிறைவுரை

அறிமுகவுரை:-

வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.


சொல் வளம்:-

இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.


தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.


ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.


“பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்


சொல்லாக்கத்திற்கான தேவை:-

சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.


இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.


இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.


மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.


தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.


உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.


மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.


மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.


பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.


நிறைவுரை:-

மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.

புதிய சொல்லாக்கத்தின் சேவை

இன்றைய தமிழுக்குத் தேவை

நன்றி!


தமிழ்ச்சொல் வளம் – வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ் மொழிக்காக மாநாடு நடத்திய நாடு ________


விடை : மலேசியா


2. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார் _____________


விடை : பாரதியார்


3. ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் _____________ அமைந்திருக்கும்.


விடை : அறிவொழுக்கங்கள்


4. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் _____________


விடை : லிசுபனின்


5. _____________ என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.


விடை : 1554-ல் கார்டிலா


6. இந்திய மொழிகளிலேயே முதலில் _____________ அச்சேறியது தமிழ் மொழி


விடை : மேலைநாட்டு எழுத்துருவில்


II. குறு வினா

1. ஒரு தாவரத்தின் அடிப்பகுதிகளைக் குறிப்பதற்கான சொற்கள் எவை?


தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி


2. தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?


கவை, காெம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு


 

3. தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?


சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை


III. சிறு வினா

1. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களை விளக்கத்துடன் கூறுக.


பூம்பிஞ்சு : பூவோடு கூடிய இளம்பிஞ்சு

பிஞ்சு : இளம் காய்

வடு : மாம்பிஞ்சு

மூசு : பலாப்பிஞ்சு

கவ்வை : எள்பிஞ்சு

குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

முட்டுக் குரும்பை : சிறு குரும்பை

இளநீர் : முற்றாத தேங்காய்

நுழாய் : இளம்பாக்கு

கருக்கல் : இளநெல்

கச்சல்: வாழைப்பிஞ்சு

2. தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான  சொற்கள் விளக்குக


கொத்து : அவரை, துவரை முதலியவற்றின் குலை

குலை : கொடி முந்திரி போன்றவற்றின் குலை

தாறு : வாழைக் குலை

கதிர் : கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்

அலகு அல்லது குரல் : நெல், தினை முதலியவற்றின் கதிர்

சீப்பு : வாழைத் தாற்றின் பகுதி.

3. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களை விளக்குக


தொலி : மிக மெல்லியது

தோல் : திண்ணமானது

தோடு : வன்மையானது

ஓடு : மிக வன்மையானது

குடுக்கை : சுரையின் ஓடு

மட்டை : தேங்காய் நெற்றின் மேற்பகுதி

உமி : நெல்,கம்பு முதலியவற்றின் மூடி

கொம்மை : வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

4. தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களை கூறுக


நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை

கன்று : மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

குருத்து: வாழையின் இளநிலை

பிள்ளை: தென்னையின் இளநிலை

குட்டி: விளோவின் இளநிலை

மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை

பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

5. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக


தேவநேயப்பாவணர் சிறப்புப் பெயர் மொழி ஞாயிறு

இலக்கணக் கட்டுரைகள், மொழியாராச்சி கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலக கழகத் தலைவர் இவர் ஆற்றிய பணிகள் ஆகும்.


6. கார்டிலா – நூல் குறிப்பு வரைக


1554-ல் கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

ரோமன் வரி வடிவில் அச்சிடப்பட்ட நூல்இதனை Carthila de lingo Tamul e Portugues என்பர்இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் மொழி.