Briht Zoom 10th Std Tamil Solutions 2022 - 1.1.Mother tongue

UNIT 1: அமுதஊற்று

1. அமுதஊற்று 

1.1. அன்னை மொழியே

Bright Zoom Tamil

Mother tongue

I. பலவுள் தெரிக

1.“எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

A. எந் + தமிழ் + நா

B. எந்த + தமிழ் + நா

C. எம் + தமிழ் + நா

D. எந்தம் + தமிழ் + நா

விடை : C. எம் + தமிழ் + நா


II. குறு வினா

“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” 

– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சீவகசிந்தாமணி,வளையாபதகுண்டலகேசி,இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்


III. சிறு வினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”

அன்னை மொழியே! அழகான செந்தமிழே!

பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!

குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!

பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!

பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!

கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!

பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”


IV. நெடு வினா

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திர னாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

அறிமுக உரை:-

தாயே! தமிழே! வணக்கம்,

தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.

என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.


நிறைவுரை:-


இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.


அன்னை மொழியே – வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்

A. பெருஞ்சித்திரனார்

B. பாரதியார்

C பாரதிதாசன்

D. சுரதா

விடை : A. பெருஞ்சித்திரனார்


2. செந்தமிழ் பிரித்து எழுதுக.

செந் + தமிழ்

செம் + தமிழ்

செ + தமிழ்

செம்மை + தமிழ்

விடை : செம்மை + தமிழ்


II. குறு வினா

1. பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?

தென்மொழி

தமிழ்ச்சிட்டு


2. பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?

◆ உலகியல் நூறு

◆ பாவியக்கொத்து

◆ நூறாசிரியம்

◆ எண்சுவை எண்பது

◆ மகபுகுவஞ்சி

◆ கனிச்சாறு

◆ பள்ளிப்பறைவைகள்


3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

எட்டுத்தொகை

பத்துப்பாட்டும்.


III. சிறு வினா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக

★ பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.

★ இவர்  எழுதிய தென்மொழி, தமிழ்ச்சிட்டு நூல்கள் தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்தன.

★ உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.

★ இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.