TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!

பொதுத்தமிழ் - இலக்கியம் 

யசோதர காவியம்..!

★  ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.


★ இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.


★  இந்நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.


★  இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.


★  யசோதர காவியம் 'யசோதரன்" என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.


★  இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.


★  பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும், 330 எனவும் கருதுவர்.


யசோதர காவியத்தில் இடம்பெற்ற தொடர்கள்:


★ 'ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக"


★ 'போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக"


சொல்லும் பொருளும்:

■ வெகுளி - சினம்

■  விரதம் - மேற்கொண்ட நன்னெறி

■ அறம் - நற்செயல்