TNPSC பொதுத்தமிழ் 2022

வினா விடைகள்!!

Tamil GK -Quizzes, Performance,

நிகழ்கலை !!


Bright Zoom Tamil


★  கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவது எது? 

- நிகழ்கலை

★ சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது எது?

 - நிகழ்கலை

★ நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருக்கும் நிகழ்கலைகளுள் ஒன்றின் பெயர் யாது? - சேவையாட்டம்

★  பழந்தமிழ் மக்களின் எவற்றை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன? 

- கலை, அழகியல், புதுமை

★  கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய மூங்கில் குச்சியை வைத்து ஆடும் நிகழ்கலை எது? 

- கரகாட்டம்

★ பன்னெடுங் காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று எது? 

- கரகாட்டம்

★  'கும்பாட்டம்" என்று அழைக்கப்படும் கலை எது? 

- கரகாட்டம்

★ ஒயிலாட்டத்தில் தனிச்சிறப்பானது எது?

 - கம்பீரத்துடன் ஆடுதல்

★ நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடி இடம்பெறும் நூல் எது? 

- புறநானூறு

★  சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ----------------- என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

 - குடக்கூத்து