TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!
பொதுத்தமிழ் - இலக்கியம்
நீலகேசி
💥 நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
💥 இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
💥 கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
💥 சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நு}லான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
💥 நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
நீலகேசி கூறும் நோயின் மூன்று வகைகள்:
💥 மருந்தினால் நீங்கும் நோய்
💥 எதனாலும் தீராத தன்மையுடைய நோய்.
💥 அடங்கி இருப்பன போல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவது.
💥 'பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே" - என்ற வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ளன.
சொல்லும் பொருளும்:
💥 உவசமம் - அடங்கி இருத்தல்
💥 நிழல்இகழும் - ஒளிபொருந்திய
💥 கூற்றவா - பிரிவுகளாக
💥 பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே
💥 ஓர்தல் - நல்லறிவு
0 Comments