TNPSC போட்டித் தேர்வுகள் - 2022!! 

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் ..!

- (பகுதி - 2)


1. UNECE அறிக்கையின்படி நாடு முழுவதிலும் எத்தனை காரட் வைரங்கள் கிடைக்கின்றன?

 - 4582 ஆயிரம் காரட்


2. இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய போக்குவரத்து அமைப்பாக விளங்குகிறது? 

- 4


3. இந்தியாவின் இருப்புப் பாதை நீளம் 63,000 கி.மீட்டரில் எத்தனை கி.மீ மின்மயமாக்கப்பட்டுள்ளது? 

- 13000 கி.மீ


4. இந்திய இரயில்வே முதல் Wi- fi வசதியை எங்கு தொடங்கியது? 

- பெங்களூரு


5. தேசிய துறைமுக வாரியம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 

- 1950


6. வழக்கில் இல்லாத ஆற்றல் என அழைக்கப்படுவது எது? 

- புதுப்பிக்கக்கூடிய வளங்கள்


7. நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் அமைச்சகம் எது?

 - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD)


8. எந்த ஆண்டு மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி, மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் வந்தது? 

- 1976


9. இந்தியாவின் அனைத்து மருத்துவ நடைமுறைகளும் -------- அமைச்சகத்தின் கீழ் உள்ளன.

 - ஆயுஷ் (Ayush)


10. இந்தியாவின் மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் எவை? 

- கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் (கர்நாடகா), ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்க வயல் (கர்நாடகா), அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் (ஆந்திரப்பிரதேசம்)



- (பகுதி - 3)


🌺  'எப்போதும் உபரி நிதிநிலை இருக்கட்டும், சிலநேரங்களில் சம நிதிநிலை இருக்கலாம், ஆனால் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது" என்று கூறியவர் யார்? 

- திருவள்ளுவர்


🌺  காந்தியடிகள் இயந்திரங்களை -------- என வர்ணித்தார். 

- மிகப்பெரிய பாவம்


🌺  'உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்" என்று கூறியவர் யார்? 

- காந்தியடிகள்


🌺  திட்டமிடுதலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை யாரைச் சாரும்? 

- ஜவஹர்லால் நேரு


🌺  'இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்று கூறியவர் யார்?

 - காந்தியடிகள்


🌺  தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

 - ஜவஹர்லால் நேரு


🌺  அம்பேத்கரின் எந்த நு}லில் அவருடைய பொருளாதார கருத்துக்கள் காணப்படுகின்றன? 

- இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை


🌺  எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நு}று கோடியைத் தாண்டியது? 

- 2001


🌺  காந்தியப் பொருளாதாரம் என்ற கருத்தை உருவாக்கியவர் யார்? 

- து.ஊ.குமரப்பா


🌺  அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்றும், நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்று கூறியவர் யார்? - அம்பேத்கர்


- (பகுதி - 4)


🌺  அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை குமரப்பா எந்த ஆண்டு தோற்றுவித்தார்? 

- 1935


🌺  குமரப்பா சிறையில் இருந்தபோது எழுதிய புத்தகங்கள் எவை? 

- நிலைத்த பொருளாதாரம், இயேசுவின் வழிமுறைகள், கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும்


🌺  குமரப்பாவை பச்சை காந்தி என அழைத்தவர் யார்? 

- இராமச்சந்திர குஹா


🌺  P.சு பிரமானந்தாவின் கூற்றுப்படி, இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக குறிப்பிடப்படுபவர்கள் யார்? 

- னு.சு.காட்கில், ஊ.N.வக்கில், ஏ.மு.சு.ஏ ராவ்


🌺 ஏ.மு.சு.ஏ ராவின் ஆசிரியர் யார்? 

- து.ஆ.கீன்சின்


🌺  ராவின் ஆய்வுக் கட்டுரை பெயர் என்ன?

 - முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்


🌺  ராவின் எந்த புத்தகம் இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவிற்கான காரணங்களை விளக்குகிறது? 

- இந்தியப் பொருளியல் வாழ்வில் என்ன தவறு?


🌺  ராவ் தேசிய அளவிலான எத்தனை ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கினார்? 

- 3


🌺 'தொழில் நுட்பத் தெரிவு" யாருடைய புத்தகம்?

 - அமர்த்தியாகுமார் சென் 


🌺  நாட்டு வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது எது?

 - ஒரு குடிமகனின் சராசரி தலா வருமானம்