TNPSC வினா விடைகள் - 2022!!

TNPSC பொது அறிவு 

இந்திய தேசிய இயக்கமும் தேசத்தலைவர்களின் எழுச்சியும்..!


TNPSC General Knowledge

Indian National Movement:

The Rise of Heads of State


🌺 'செல்வச் சுரண்டல்" என்னும் கோட்பாட்டை முன் வைத்தவர் யார்?

 - தாதாபாய் நௌரோஜி


🌺 தாதாபாய் நௌரோஜி எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

 - 'வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்"


🌺 இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

- W.C.பானர்ஜி


🌺 ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு எடுத்துக்காட்டு தருக. 

- வங்கப் பிரிவினை



🌺 1899 ஜனவரி 6-இல் புதிய தலைமை ஆளுநராகவும், இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டவர் யார்? - கர்சன் பிரபு


🌺 கர்சன் பிரபு வங்காளத்தைப் பிரிக்க ஆணைப் பிறப்பித்த ஆண்டு? - 1905


🌺 ஒரிஷா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது?

கூற்று 1 : 

1866-ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.


கூற்று 2 :

பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.


A. 1 மற்றும் 2 சரி 


B. 1 மட்டும் சரி, 2 தவறு


C. 2 மட்டும் சரி, 1 தவறு


🌺 தேசியம் என்பதன் பொருள் ஒன்றினைக் கூறு.

- தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல்.


🌺 தாதாபாய் நௌரோஜி லண்டனில் உருவாக்கிய அமைப்புகள் சிலவற்றைக் கூறு. 

◆ இந்தியச் சங்கம்

(Indian society - 1865)

◆ கிழக்கிந்தியக்கழகம்

(East Indian Association - 1866)


🌺 தொடக்க கால முக்கிய தேசியவாதிகளை வரிசைப்படுத்துக:


🌷A.O.ஹியூம், W.C.பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி.


🌷கோபால கிருஷ்ண கோகலே, பெரோஸ்ஷா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி.


🌷லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால், பால கங்காதர திலகர்.


TNPSC வினா விடைகள் - 2022, TNPSC பொது அறிவு, இந்திய தேசிய இயக்கம், தேசத்தலைவர்களின் எழுச்சி, TNPSC General Knowledge, Indian National Movement, The Rise of Heads of State