TNPSC பொது அறிவு வினா விடைகள்!!
இந்திய ஆட்சியியல்
இந்திய அரசியலமைப்பு!!
1. -------------------- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.
- அடிப்படை உரிமைகள்
2. எந்த நாட்டினுடைய அரசியலமைப்பிலிருந்து அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பெறப்பட்டது?
- அயர்லாந்து
3. இந்தியாவில் முதன்முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
- 1951
4. இந்தியாவில் முதன்முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி எந்த மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது? - பஞ்சாப்
5. ----------------- எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல் மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
- 'அமெண்ட்மெண்ட்" (Amendment)
6. அரசியலமைப்பின் எத்தனையாவது சட்டத்திருத்தம் 'குறு அரசியலமைப்பு" என அறியப்படுகிறது?
- 42-வது சட்டத்திருத்தம்
7. அமைச்சரவை திட்டக்குழு 1946-இன் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டது எது?
- இந்திய அரசியலமைப்புச் சட்டம்
8. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352-இன் கீழ் அவசரநிலையை அறிவிப்பவர் யார்?
- குடியரசுத்தலைவர்
9. இந்தியக் குடியுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
- 1955
10. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு எனக் கூறுவது எது?
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
பொது அறிவு வினா விடைகள்!!
இந்திய ஆட்சியியல் - இந்திய அரசியலமைப்பு!!
1. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32-ஐ இந்திய அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா" எனக் கூறியவர் யார்?
- டாக்டர்.B.R.அம்பேத்கர்
2. சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பது எது?
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)
3. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (lll) 12-இல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் ----------------- பற்றி கூறுகின்றன.
- அடிப்படை உரிமைகள்
4. இந்திய அரசு 'செம்மொழிகள்" எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்த ஆண்டு?
- 2004
5. அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை இந்திய அரசியலமைப்பின் 'புதுமையான சிறப்பம்சம்" என விவரித்தவர் யார்?
- டாக்டர்.B.R.அம்பேத்கர்
6. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை -------------------------- அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்? - முன்னாள் சோவியத் யூனியன் (USSR)
7. இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்த பகுதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளது எது?
- மத்திய நாடாளுமன்றம்
8. 1969-இல் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு யாருடைய தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது?
- டாக்டர்.P.V.இராஜமன்னார்
9. அரசியலமைப்பு சட்டப் பகுதி ஓஏஐஐ-இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் ------------------ பற்றி விவரிக்கின்றன.
- அலுவலக மொழிகள்
10. தற்போது அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
- 22 மொழிகள்
0 Comments