12th Tamil Unit 2 - Book back Question and answer guide

இலக்கணத் தேர்ச்சிகொள்

1.தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ) பொருட்குறிப்பு     

ஆ)  சொற்குறிப்பு.           

இ) தொடர்க்குறிப்பு   

ஈ) எழுத்துக்குறிப்பு

2)உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்---- 

அ) நன்னூல்.    

ஆ) அகத்தியம்     

இ) தொல்காப்பியம்.  

ஈ) இலக்கண விளக்கம். 

3)யார்? எது?கிய வினாச்சொற்கள்.  முறையே.  பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள்

அ) அஃறிணை, உயர்திணை     

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத் திணை, அஃறிணை 

ஈ)விரவுத்திணை, உயர்திணை

4) பொருத்தி - சரியான விடை தேர்க:-

1.2
அ) அவன்,அவள்,அவர்1.உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்2.உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம்3)தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ)நாங்கள், நாம்4)பதிவிடு பெயர்கள்

அ) 4, 1, 2, 3 

ஆ) 2, 3, 4, 1 

இ) 3, 4, 1, 2 

ஈ) 4, 3, 1, 2

5)மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

◆ திணை, பால், எண், இடம் ஆகியன மொழியின் அடிப்படைப் பண்புகளாகும் இவையே மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன.

6) உயர்திணை பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டுதொடர்களை  எழுதுக?

◆ தலைவர்கள் சொன்னார்கள்.

◆ மாணவர்கள் படிப்பார்கள்.

பலவுள் தெரிக

1) பொருத்துக

1.2
அ) குரங்குகள்1.கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள்2.மேய்ச்சலை மறந்தன
இ) பறவைகள்3)குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள்4 .மரங்களிலிருந்து வீழ்ந்தன

அ) 1, 3, 4, 2 

ஆ) 3,1,4,2

இ) 3, 2, 1, 4    

ஈ) 2, 1, 3, 4

2)நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது - என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது ?

அ) சூரிய ஒளிக்கதிர் 

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்.    

ஈ) நீர்நிலைகள்

3)வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

 அ) பருவநிலை மாற்றம்  ஆ) மணல் அள்ளுதல்.    இ)பாறைகள் இல்லாமை   ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்.

4)பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு 

அ) வினைத்தொகை     

ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்       

 ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

5) உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது 

அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது

இ) காலநிலை மாறுபடுகிறது 

ஈ)புவியின் இயக்கம் வேறுபடுகிறது.

குறுவினா

1)ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்? 

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் தொடர் வாயிலாக சுற்றுப்புறச் சூழல் தூய்மையினையும், மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும், மண் அரிப்பு, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஒழிப்பையும், நிலத்தடி நீர் பெருக்கத்தையும் வலியுறுத்துவேன்.

2)இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக

* இனம்+நிரை

விதி: - மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

* இன+நிரை = இனநிரை.

3)மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் - இரு தொடர்களாக்குக :-

*மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான் .

அதன் விளைவை மனிதன் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது.

4)நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக

*மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது மழை பெய்தது.

*திடீரென சூரியன் தோன்ற மழை மேகத்தில் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.

*மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரம் போல் காட்சியளிக்கிறது.

#சிறுவினா

1)நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்' - இக்கவிதையின் அடி 'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் நாட்டுப்புற பாடல் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக?

பாதை போடுபவர் ஒருவர் - அதில்

பயணம் செய்பவர் மற்றொருவர்

இதுதான் உலக உண்மை

 நாட்டுப்புறக் கவிஞன் 

மூங்கில் இலை மேலே 

தூங்கும் பனி நீரே 

தூங்கும் பனி நீரை 

வாங்கும் கதிரோனே !

என்று பாடினான் 

           தன்னை மறந்து மூங்கில் இலைகள் நிறைந்து இருக்கும் பனித்துளியை கதிரவன் வாங்கி மகிழ்கிறான். இது நாட்டுப்புறக் கவிஞனின் நயமான கற்பனை. கவிஞர் அய்யப்ப மாதவன் நீர் நிலைகளில் தேங்கியுள்ள நீரைப் பார்க்கிறார். நீர், நாள்கள் செல்லச் செல்லக் குறைவதைப் பார்க்கிறார். கற்பனை விரிகிறது. நாட்டுப்புறக் கவிஞனின் கற்பனையைத் தொடுகிறது. நீர்நிலைகளில் இருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் என்ற கற்பனை தொடர்கிறது. கற்பனைச் சங்கிலி காலங்காலமாக அறுந்துபடாமல் அப்படியே தொடர்கிறது.

2)வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

*தாழ்வானன பகுதிகளில் பெருகிய வெள்ளத்தில் வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர், எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.

"""""""""""""""""""""""""

TN Books Guide

Home

12th Economics Guide

12th Tamil Unit 2 - Book back Question and answer guide

12th Tamil Unit 2 - Book back Question and answer guide

இலக்கணத் தேர்ச்சிகொள்

1.தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ) பொருட்குறிப்பு     ஆ) சொற்குறிப்பு.           இ) தொடர்க்குறிப்பு   ஈ) எழுத்துக்குறிப்பு

******************************************

2)உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்---- 

 அ) நன்னூல்.    ஆ) அகத்தியம்     இ) தொல்காப்பியம்.   ஈ) இலக்கண விளக்கம். 

******************************************

3)யார்? எது? ஆகிய வினாச்சொற்கள்.  முறையே.  பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள்

அ) அஃறிணை, உயர்திணை     

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத் திணை, அஃறிணை 

ஈ)விரவுத்திணை, உயர்திணை

******************************************

4) பொருத்தி - சரியான விடை தேர்க:-

1. 2

அ) அவன்,அவள்,அவர் 1.உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் 2.உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

இ) நாம் முயற்சி செய்வோம் 3)தன்மைப் பன்மைப் பெயர்கள்

ஈ)நாங்கள், நாம் 4)பதிவிடு பெயர்கள்

அ) 4, 1, 2, 3 ஆ) 2, 3, 4, 1 இ) 3, 4, 1, 2 ஈ) 4, 3, 1, 2

******************************************

5)மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

*திணை, பால், எண், இடம் ஆகியன மொழியின் அடிப்படைப் பண்புகளாகும் இவையே மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன.

******************************************

6) உயர்திணை பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டுதொடர்களை  எழுதுக?

*தலைவர்கள் சொன்னார்கள்.

*மாணவர்கள் படிப்பார்கள்.

******************************************

பலவுள் தெரிக

1) பொருத்துக

1. 2

அ) குரங்குகள் 1.கன்றுகளைத் தவிர்த்தன

ஆ) பசுக்கள் 2.மேய்ச்சலை மறந்தன

இ) பறவைகள் 3)குளிரால் நடுங்கின

ஈ) விலங்குகள் 4 .மரங்களிலிருந்து வீழ்ந்தன

அ) 1, 3, 4, 2 ஆ) 3,1,4,2. இ) 3, 2, 1, 4    ஈ) 2, 1, 3, 4

******************************************

2)நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது - என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது ?

அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்.    ஈ) நீர்நிலைகள்

******************************************

3)வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

 அ) பருவநிலை மாற்றம்  ஆ) மணல் அள்ளுதல்.    இ)பாறைகள் இல்லாமை   ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்.

******************************************

4)பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு 

அ) வினைத்தொகை     ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்        ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

******************************************

5) உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது 

அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது

இ) காலநிலை மாறுபடுகிறது 

ஈ)புவியின் இயக்கம் வேறுபடுகிறது.

******************************************

#குறுவினா

1)ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்? 

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் தொடர் வாயிலாக சுற்றுப்புறச் சூழல் தூய்மையினையும், மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும், மண் அரிப்பு, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஒழிப்பையும், நிலத்தடி நீர் பெருக்கத்தையும் வலியுறுத்துவேன்.

******************************************

2)இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக

* இனம்+நிரை

விதி: - மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

* இன+நிரை = இனநிரை.

******************************************

3)மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் - இரு தொடர்களாக்குக :-

*மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான் .

*அதன் விளைவை மனிதன் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது.

4)நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக

*மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது மழை பெய்தது.

*திடீரென சூரியன் தோன்ற மழை மேகத்தில் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.

*மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரம் போல் காட்சியளிக்கிறது.

******************************************

#சிறுவினா

1)நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்' - இக்கவிதையின் அடி 'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் நாட்டுப்புற பாடல் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக?

பாதை போடுபவர் ஒருவர் - அதில்

பயணம் செய்பவர் மற்றொருவர்

இதுதான் உலக உண்மை

 நாட்டுப்புறக் கவிஞன் 

மூங்கில் இலை மேலே 

தூங்கும் பனி நீரே 

தூங்கும் பனி நீரை 

வாங்கும் கதிரோனே !

என்று பாடினான் 

           தன்னை மறந்து மூங்கில் இலைகள் நிறைந்து இருக்கும் பனித்துளியை கதிரவன் வாங்கி மகிழ்கிறான். இது நாட்டுப்புறக் கவிஞனின் நயமான கற்பனை. கவிஞர் அய்யப்ப மாதவன் நீர் நிலைகளில் தேங்கியுள்ள நீரைப் பார்க்கிறார். நீர், நாள்கள் செல்லச் செல்லக் குறைவதைப் பார்க்கிறார். கற்பனை விரிகிறது. நாட்டுப்புறக் கவிஞனின் கற்பனையைத் தொடுகிறது. நீர்நிலைகளில் இருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் என்ற கற்பனை தொடர்கிறது. கற்பனைச் சங்கிலி காலங்காலமாக அறுந்துபடாமல் அப்படியே தொடர்கிறது.

******************************************

2)வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

*தாழ்வானன பகுதிகளில் பெருகிய வெள்ளத்தில் வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர், எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.

* தாம் பழகிய இடத்தைவிட்டுப் பெயரும் நிலையில் வருத்தம் அடைந்தனர் .

*அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களைக் கொண்ட காந்தள் மாலைகசங்கியது.

*பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்கள் பற்கள் நடுங்கின.

******************************************

3)மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக:-

*பேரிடர்க் காலங்களில் தாங்கக் கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும் .

*நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

*சமூகக்காடுகள் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் 

*கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக்காடுகளை வளர்த்தல் வேண்டும் .

*பதற்றமடைதலைத்தவிர்த்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும் புயல்,மழை, தொடர்பான தகவல்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும் .

*வதந்திகளை நம்பவோ, பரப்பவோ கூடாது.

* அரசு, தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மீட்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

*பாதுகாப்பு மையங்களையும், மருத்துவக் குழுக்களையும் அணியமாக வைத்து இருக்க வேண்டும்.

******************************************

4)பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக

*நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

* வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து,புயல், வெள்ளம், நிலநடுக்கம், சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது.

* இதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

*மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துப் பேரிடர்க் காலங்களில் செயலாற்ற, பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்துள்ளது.

******************************************

#நெடுவினா

1)நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:

               இயற்கையோடு இயைந்த வாழ்வு வான்புகழ் கொண்டு திகழ்ந்தது நம் பண்டைத் தமிழர் இனம். இங்கே உண்பதும் உடுப்பதும் இறையும் இலக்கியமும், விழாவும் கலையும், கவிதையும் நடனமும், வீரமும் விளையாட்டும் யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னை . இன்று எங்கும் நெகிழி மயமான சூழலுக்கு அது கேடு செய்வதால் தமிழக அரசு தடை செய்துள்ளது. "நெகிழி இல்லா தமிழ்நாடு நம் இலக்காகும்"

நெகிழியினால் ஏற்படும் நிகழ்வுகள்:

                கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை தூக்கி எறியும் நெகிழிப் பையில் உள்ள உணவை உட்கொள்ளும் போது நெகிழியையும் உட்கொண்டு உணவுக்குழாய் அடைபட்டு மரணமடையக் காரணமாகிறது. நெகிழி குடிதண்ணீர்க் கலன்கள், குளிர்பானக் கலன்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இதனால் கழிவு நீர் அடைபட்டு, தேங்கிப் புதிய நோய்கள் பரவும். சுகாதாரக் கேடு ஏற்படவும் காரணமாகிறது. மழைநீர் நிலத்தடிக்கு ஊடுறுவிச் செல்ல இடையூறாக உள்ளது.

நெகிழியைத் தவிர்த்தல்:

       துணிப்பை என்பது எளிதானது

                தூர எறிந்தால் உரமானது 

      நெகிழி பார்க்க அழகானது

              தூர எறிந்தால் விசமானது.   

                 சராசரியாக ஒரு நெகிழிப் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும், அவை அழிய 100 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது, மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை மருந்து கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும்.

அனுகுண்டைவிட ஆபத்து:

            ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் நெகிழி பைகள் மிகப்பெரிய கேடு ஆகிவிட்டது குறிப்பிடும் வகையில் 

'நெகிழிப் பைகள் அணுகுண்டை விட ஆபத்தானவை' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 தவிர்ப்பதால் விளையும் நன்மைகள் :

             நெகிழியைத் தவிர்க்கும்போது விவசாய நிலம், மணல், நீர் நிலைகள். விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.

நெகிழிக்கு மாற்று வாழை :

              இலை, பாக்கு மரத்தட்டு, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரம் மட்பாண்டப் பொருள்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகித, சணல் பைகள் காகிதத் துணிக்கொடிகள், பீங்கான் பாத்திரங்கள் ஆகியவற்றை நெகிழிக்கு மாற்றாக நாம் பயன்படுத்தலாம்.

முடிவுரை:

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மட்கும் தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிடுவோம். அனைவரும் ஒன்று சேர்ந்து பூமித்தாயினைப் பாதுகாத்திடுவோம். நெகிழி இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும் தனக்குள் உறுதிமொழியை ஏற்படுத்திக் கொண்டால் நெகிழி தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து.

******************************************

2)நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க .

*தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.

*தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தில் வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.

*தாம் பழகிய நிலத்தை விட்டு பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.

*அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை

*கசங்கியது பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன.

*குரங்குகள் நடுங்கின மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.

*மக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தது .

*மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

******************************************

3)பொறுப்புணர்ச்சியின்றி இருந்த நாரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.

******************************************

4)புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக?

அனுப்புநர்:

              ஊர்ப் பொதுமக்கள்,

               பாரதி நகர்,

              பட்டிவீரன்பட்டி ,

              திண்டுக்கல் -4.

பெறுநர்

              மின்வாரியப் பொறியாளர் அவர்கள்,

              தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம்,

              திண்டுக்கல்.

மதிப்பிற்குரிய ஐயா:

பொருள் : புயல் தாக்கத்தினால் எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டுதல் சார்பாக:-

வணக்கம்,

            நாங்கள் பட்டிவீரன்பட்டியில் பாரதி நகர்ப்பகுதியில் வசித்து வருகிறோம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை . எங்கள் பகுதிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது சுழன்றடித்த சூறாவளியால் மரங்கள் வீழ்ந்து மின் இணைப்புக் கம்பிகள் எல்லாம் அறுந்து கிடக்கின்றன. விளையாட வரும் குழந்தைகள், வண்டி வாகனங்களில் செல்வோர், வயலுக்கு ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வோர் என்ற பலரும் பயணம் செய்யும் பாதை இது. மின் இணைப்புக் கம்பிகள் அறுந்தும், தொங்கிக்கொண்டும் கிடப்பதால் பலருக்கு துன்பம் ஏற்பட வாய்ப்புண்டு. ஏன் உயிர்ப்பலி கூட நடக்கலாம் எனவே, அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சீர்செய்து தருமாறு உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எங்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குத் தருவோம் என உறுதி கூறுகிறோம்.

இப்படிக்கு,

ஊர்ப் பொதுமக்கள்,

               பாரதி நகர்,

              பட்டிவீரன்பட்டி ,

              திண்டுக்கல் -4.

இடம் : பட்டிவீரன்பட்டி,

நாள் : 27.3.2019

உறைமேல் முகவரி,

பெறுநர்

              மின்வாரியப் பொறியாளர் அவர்கள்,

              தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம்,

              திண்டுக்கல்.

12th Tamil Guide - Book back Question and answer