வரலாற்றில் புவியியல் அமைப்பு (Geographical structure in history)

இமாலய மலைகள் (Himalayan Mountains)

Bright Zoom Tamil,


புவியியல் அமைப்பு (Geographical structure)

◆ வரலாற்றின் போக்கை பெரும்பாலும் காலமும் இடமும் நிர்ணயிக்கின்றன என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அதன் புவியியல் கூறுகளே பெரிதும் நிர்ணயிக்கின்றன.

◆  இந்திய வரலாற்றிலும் புவியியலின் தாக்கத்தை காணலாம். எனவே இந்தியாவின் புவியியல் கூறுகளை அறிந்து கொள்வதன் மூலம் அதன் வரலாற்றை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 

◆ இந்தியத் துணைக்கண்டம் ஒரு தெளிவான புவியியல் அமைப்பபைக் கொண்டுள்ளது. 

◆ இமாலய மலைகள் இந்தோ – கங்கைச் சமவெளி தென்னிந்திய தீபகற்பம் என அதனை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். இத்துணைக் கண்டத்தில் இந்தியா,பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான் என்ற ஐந்து நாடுகள் உள்ளன. அவற்றில் இந்தியாவே பெரியதாகும். 28 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாக அது விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடிக்கு மேலாகும்.


இமாலய மலைகள் :

◆ இந்தியாவின் வடக்குப் பகுதியில் இமாலய மலைகள் அமைந்துள்ளன.

◆ இந்தியாவின் வடமேற்குக் கோடியிலுள்ள பாமிர் முடிச்சில் தொடங்கும் இது கிழக்காக நீண்டு கிடக்கிறது.

◆ இதன் நீளம் கிட்டத்தட்ட 2560 கிலோ மீட்டர்களாகும்.

◆ சராசரி அகலம் 240 முதல் 320 கிலோ மீட்டர்களாகும். இமாலயத்தின் மிக உயரமான சிகரம் எவெரஸ்ட் எனப்படுகிறது.

◆ கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 8848 மீட்டர்களாகும்.

◆ சைபீரியாவிலிருந்து மத்திய ஆசியா வழியாக வீசும் கடும் குளிர்காற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக இமய மலைகள் திகழ்கின்றன.

◆ இதனால் இந்தியாவின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் சீரான வெப்பத்துடன் காணப்படுகிறது.

◆ குளிர்காலத்தில் இமாலயப் பகுதியில் பனிமூடிக்கிடக்கிறது. எனவே இதன் பெரும்பகுதி வாழ்வதற்கேற்றதாக இல்லை.

◆ படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் இயற்கைத் தடுப்பாக இமயமலைகள்; இருந்துவந்தன என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது.

◆ ஆனால் வடமேற்கு மலைகளில் காணப்படும் சைபர், போலன், குர்ரம், கோமல் போன்ற கணவாய்கள்; இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் எளிய வழித்தடங்களாக அமைந்துள்ளன.

◆ இந்துகுஷ், சுலைமான், கிர்தார் மலைத்தொடர்களில் இக்கணவாய்கள் உள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இக்கணவாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெற்றன.

◆ படையெடுப்பாளர்களும், குடியேறிகளும் இக்கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்தோ-ஆசிரியர்கள், இந்தேதா-கிரேக்கர்கள், பார்த்தியர்கள், சாகர்கள், குஷானர்கள், ஹ_ணர்கள், துருக்கியர்கள் போன்றோர் இக்கணவாய்கள் மூலமே இந்தியா வந்தனர்.

◆ இப்பகுதியிலுள்ள ‘ஸ்வாத்’ பள்ளத்தாக்கும் ஒரு முக்கிய வழித்தடமாகும். மாசிடோனியாவின்; அலெசாந்தர் இவ்வழியாகத்தான் இந்தியாமீது படையெடுத்தார்.

◆ படையெடுப்பாளர்களைத் தவிர சமயப் பரப்பாளர்களும், வணிபர்களும்கூட இவ்வழிதடங்கள் மூலமாக இந்தியாவுக்கு வந்தனர்.

◆ எனவும் இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்புக்கும் பண்பாட்டுத் தொடர்புக்கும் வடமேற்கு மலைகளிலுள்ள கணவாய்கள் வழிவகுத்தன.

◆ காஷ்மீருக்கு வடக்கே காரகோரம் மலைத்தொடர் உள்ளது.

◆ உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரமான மவுண்ட் காட்வின் ஆஸ்டின் இங்கு தான் உள்ளது.

◆ இமயமலையின் இப்பகுதயிலுள்ள கணவாய்கள் உயரமாகவும் குளிர்காலத்தில் பனி படர்ந்தும் காணப்படுகின்றனன.

◆ கில்ஜித் வழியாக மத்திய ஆசியாவிற்கு செல்லும் காரகோரம் பெருவழியும் இங்குள்ளது. ஆனால் இத்தடத்தில் மிகக் குறைவான போக்;குவரத்தே நடைபெறுகிறது.

◆ காஷ்மீர் பள்ளத்தாக்கு உயர்ந்த மலைகளால்; சூழப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு கணவாய்கள் மூலம் இப்பள்ளத்தாக்கை சென்;றடையலாம்.

◆ பண்பாட்டிலும் பாரம்பாயத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

◆ இமாலய மலைகளின் அடிவாரத்தில் நேபாளம் உள்ளது.

◆ கங்கைச் சமவெளியிலிருந்து பல்வேறு கணவாய்கள் மூலம் நேபாளத்தை சென்றடையலாம்.

◆ கிழக்கே அஸ்ஸாம் வரை இமயமலைகள் நீண்டு கிடக்கின்றன.

◆ பாட்கோய், நாகாய், லுஷாய் போன்ற மலைத்தொடர்கள் இவற்;றில் குறிப்பித்தக்கவை. கடும் மழைக்கும் அடர்ந்த காடுகளுக்கும் இவை பெயர் பெற்றவை.

◆ ஆனால், வாழ்வதற்கான சூழல் மிகவும் குறைவே. வடகிழக்கு இந்தியாவின் மலைகளைக்; கடந்து செல்வதும் எளிதல்ல. எனவே இப்பகுதி பெரும்பாலும் தனித்தே காணப்படுகிறது..