TNPSC பொது அறிவு வினா விடைகள் - 2022!!

இந்திய தேசிய இயக்கம் - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்!!

Indian National Movement - Social change in Tamil Nadu..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,

★ தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தவர்கள் யார்?

★ சி.வை.தாமோதரனார்

★ உ.வே.சாமிநாதர்

★  பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் யார்? - சி.வை.தாமோதரனார்

★ தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டவர் யார்? - உ.வே.சாமிநாதர்

★  பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மீண்டும் கண்டறியப்பட்டதையும், அவை வெளியிடப்பட்டதையும் எதன் அடித்தளமாகக் கருதலாம்? - தமிழ் மறுமலர்ச்சி

★ தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறு மரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது எது? - பழம்பெரும் நூல்கள் வெளியீடு 

★ நவீனத் தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை எதன் வாயிலாக கண்டறிந்தனர்? - பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

★ பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் --------------- என்று அழைக்கப்படுகின்றன. - சங்க இலக்கியங்கள்

★ தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை அங்கீகரித்துள்ளவர்கள் யார்? 

★ மொழியியலாளர்கள்

★  வரலாற்று அறிஞர்கள்

★ தமிழ் அறிஞர்கள் 

★ சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்களுள் சிலவற்றைக் காண்க.

★ தொல்காப்பியம்

★ வீரசோழியம்

★ இறையனார் அகப்பொருள்

★ இலக்கண விளக்கம்

★  கலித்தொகை

★சூளாமணி 

★  தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் உ.வே. சாமிநாதர் வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்ட செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்கள் எவை?

◆சீவகசிந்தாமணி (1887)

◆ பத்துப்பாட்டு (1889)

◆ சிலப்பதிகாரம் (1892)

◆ புறநானூறு (1894)

◆ புறப்பொருள் வெண்பாமாலை (1895)

◆ மணிமேகலை (1898)

◆ ஐங்குறுநூறு (1903)

◆ பதிற்றுப்பத்து (1904)