TNPSC- பொதுத்தமிழ்  6-ஆம் வகுப்பு தமிழ்  புத்தக வினா விடைகள்!! 

TNPSC-Public Tamil 6th Class Tamil Book Question Answers!!

Bright Zoom Tamil,

1. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

A) மானம்இல்லா

B) மானமில்லா

C) மானமல்லா

D) மானம்மில்லா

விடை : B) மானமில்லா


2. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்.

A) ஆடு மேய்க்க ஆள் இல்லை

B ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

C) வழி தெரியவில்லை

D) பேருந்து வசதியில்லை

விடை : B ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை


3. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

A) பசி + இன்றி

B) பசி + யின்றி

C) பசு + இன்றி

D) பசு + யின்றி

விடை : A) பசி + இன்றி


4. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

A) படி + அறிவு

B) படிப்பு + அறிவு

C) படி + வறிவு

D) படிப்பு + வறிவு

விடை : B) படிப்பு + அறிவு


5. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

A) காட்டாறு

B) காடாறு

C) காட்டுஆறு

D) காடு ஆறு

விடை : A) காட்டாறு


6. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

A) மஞ்சள்

B) வந்தான்

C) கல்வி

D) தம்பி

விடை : C) கல்வி


7. தவறான சொல்லை வட்டமிடுக.

A) கண்டான்

B) வென்ரான்

C) நண்டு

D) வண்டு

விடை : B) வென்ரான்


8. காமராசர், குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ------- அறிமுகப்படுத்தினார்.

A) ஒற்றுமைத் திட்டம்

B) மதியஉணவு திட்டம்

C) புத்தகத் திட்டம்

D) சீருடைத் திட்டம்

விடை : D) சீருடைத் திட்டம்


9. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் ---------

A) அம்பேத்கர்

B) அண்ணா

C) பெரியார்

D) பாரதியார்

விடை : C) பெரியார்


10. பிறரிடம் நான் ------- பேசுவேன்.

A) கடுஞ்சொல்

B) இன்சொல்

C) வன்சொல்

D) கொடுஞ்சொல்

விடை : B) இன்சொல்