TNPSC -பொதுத்தமிழ் இலக்கியம்..!
குறுந்தொகை!!
TNPSC -potuttamil ilakkiyam..! Kuruntokai.
★ குறுந்தொகை --------------------- நூல்களுள் ஒன்று.
- எட்டுத்தொகை
★ இந்நூல் எதைக் கூறுகிறது?
- தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது
★ குறுந்தொகை ----------------- பாடல்களைக் கொண்டது.
- 401
★ நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது எது?
- குறுந்தொகை பாடல்கள்
★ முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் யார்?
- சௌரிப்பெருமாள் அரங்கனார்
★ குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்?
- பூரிக்கோ
★ குறுந்தொகை நு}லின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்?
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
★ குறுந்தொகையில் 37-வது பாடலைப் பாடியுள்ள சேர மரபைச் சேர்ந்த மன்னர் யார்?
- பெருங்கடுகோ
★ சேர மன்னர் பெருங்கடுகோ ----------------- நு}லில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுகோ" என அழைக்கப் பெற்றார்.
- கலித்தொகை
★ குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
- முருகன்
0 Comments