TNPSC  - பொதுத்தமிழ் 

இலக்கியம்  நற்றிணை..!

TNPSC - potuttamil  ilakkiyam  narriṇai..!

★  எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல்?

 - நற்றிணை


★  நற்றிணை -------------------- என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.

 - நல்ல திணை 


★  நற்றிணை தெள்ளத்தளிவாக எடுத்துக் கூறுவது?

 - ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர் தம் உயர் பண்புகள்


★  நற்றிணையில் எத்தனை திணைக்குமான பாடல்கள் உள்ளன? 

- ஐந்திணை


💮 நற்றிணையில் உள்ள பாடல்கள் 9 அடி சிற்றெல்லையும் -------------------- பேரெல்லையும் கொண்டவை. - 12 அடி


★ நற்றிணையில் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்? 

- பாரதம் பாடிய பெருந்தேவனார் 


 ★ போதனார் நற்றிணையில் எத்தனையாவது பாடலை மட்டும் பாடியுள்ளார்?

 - 110


★  நற்றிணையின் பேரெல்லை 12 அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக யாருடைய பாடல் அமைந்துள்ளது?

 - போதனார்


★  நற்றிணையைத் தொகுப்பித்தவர்? 

- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி


★  மிளைகிழான் நல்வேட்டனார் நற்றிணையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்?

 - நான்கு 


★ 'ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே"

 - என்ற பாடல் நற்றிணையில் யார் இயற்றியதாகும்? 

- போதனார்