TNPSC -பொதுத்தமிழ் 

இலக்கியம் - ஐங்குறுநூறு

TNPSC -potuttamil  ilakkiyam - aiṅkurunuru,

★ ஐங்குறுநூறு ------------------- நூல்களுள் ஒன்று. 

- எட்டுத்தொகை


★ ஐங்குறுநூறு பிரித்து எழுது

= ஐந்து+குறுமை+நூறு


★  ----------------- அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. 

- குறைந்த


★  திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு எத்தனைப் பாடல்களைக் கொண்டுள்ளது? 

- ஐந்நு}று பாடல்கள்


★ ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?

 - பாரதம் பாடிய பெருந்தேவனார் 


★  இந்நூலைத் தொகுத்தவர் யார்?

 - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்


★  இந்நூலைத் தொகுப்பித்தவர் யார்?

 - யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை


★  'காயா கொன்றை நெய்தல் முல்லை" 

- என்ற பாடலைப் பாடியவர் யார்? - பேயனார்


★  ஐங்குறுநூறு வாயிலாக அறியப்படுவது? 

- பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு


ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள்:

★ குறிஞ்சித்திணை - கபிலர்

★ முல்லைத்திணை - பேயனார்

★ மருதத்திணை - ஓரம்போகியார்

★ நெய்தல் திணை - அம்மூவனார்

★ பாலைத்திணை - ஓதலாந்தையார்