TNPSC பொது அறிவு வினா விடைகள்!!

தனிமங்களும் சேர்மங்களும்!!

Elements and compounds!!

1. அணு நிறையினை குறிப்பிட 'எண்கள்" என்ற வார்த்தையினைப் பயன்படுத்தியவர் யார்?

 - A. E. B டி சான்கோர்டாஸ்


2. தனிமங்களை வகைப்படுத்தும் பொருட்டு, எண்ம விதியினை முன்மொழிந்தவர் யார்?

 - J.நியூலண்ட் 


3. தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஒத்த ஒரு தனிமவரிசை அட்டவணையை உருவாக்கியவர் யார்?

 - லோதர் மேயர்


4. ஆவர்த்தன விதியின் அடிப்படையில் --------------------------- முதன்முதலாக ஆவர்த்தன அட்டவணையினைக் கட்டமைத்தார். 

- மெண்டலீஃப்


5. உலோகத் தன்மையினையும், அதிக உருகு நிலையினையும் கொண்டுள்ள தனிமங்கள் எது?

 - லாந்தனைடுகள், ஆக்டினைடுகள்


6. மந்த வாயுக்களின் எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு -------------------- என எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

- பூஜ்யம்


7. நவீன தனிமவரிசை அட்டவணையில் இடம்பெற்றுள்ள தனிமங்களுள் 78மூ-க்கும் அதிகமான தனிமங்கள் எது?

 - உலோகங்கள்


8. தனிமவரிசை அட்டவணையின் இடப்புறத்தில் எவற்றிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது?

 - உலோகங்கள்


9. ----------------------- அனைத்தும் தனிமவரிசை அட்டவணையில் வலது மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

- அலோகங்கள்


10. உலோகங்கள் மற்றும் அலோகங்களின் தனித்துவமான பண்புகளுள் சிலவற்றை ஒருங்கே கொண்டுள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 - உலோகப்போலிகள்