தமிழ்நாடு 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் பருவம் - 1  பாடம் 1.1.  எங்கல்  தமிழ் கேள்வி & பதில் 

Tamil Nadu 7th Standard Tamil Book Term :1 Lesson 1.1. Enkal Tamil -Q & A

TN BOOK Solution

Bright Zoom Tamil,

Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 Lesson 1.1. Enkal  Tamil Q & A

Solution | Lesson 1.1

பாடம் 1.1. எங்கள் தமிழ்

7ஆம் வகுப்பு தமிழ் - எங்கள் தமிழ் பாட வினா ? 

விடைகள் 2023 - 24

அமுதத்தமிழ் 

1.1. எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்


● எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.

● இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.

● காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

● தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.

● மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.


● “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலிலிருந்து “எங்கள் தமிழ்” பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.


I. சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

குறி – குறிக்கோள்

விரதம் – நோன்பு

பொழிகிற – தருகின்ற


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.

A. வழி

B. குறிக்கோள்

C. கொள்கை

D. அறம்

விடை : வழி


2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

A. குரல் + யாகும்

B. குரல் + ஆகும்

C. குர + லாகும்

D. குர + ஆகும்

விடை : குரல் + ஆகும்


3. ‘வான் + ஒலி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

A. வான்ஒலி

B. வானொலி

C. வாவொலி

D. வானெலி

விடை : வானொலி


III. நயம் அறிக

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

அருள்நெறி – அதுவே

கொல்லா – கொள்கை

எல்லா – என்றும்

அன்பும் – அச்சம்,

இன்புறவே – இசைந்திடும்


2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அருள் – பொருள்

தரலாகும் – குரலாகும்

புகழாது – இகழாது

யாரையும் – தாரையும்

இன்புறவே – அன்பறமே

அன்பும் – இன்பம்


3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

தரலாகும் – குரலாகும்

ஊக்கிவிடும் – போக்கிவிடும்

வானொலியாம்– தேன்மொழியாம்

புகழாது – இகழாது


IV. குறுவினா

1. தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

◆ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும் 

◆ கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

◆ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.


2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

◆ தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்

◆ தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்


V. சிறுவினா

‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக

★ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும். அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

★ தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார். தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்

★ கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

★ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.


கூடுதல் வினாக்கள்

I. பொருத்துக

1. விரதம்     - வழி

2. நெறி           - நோன்பு

3. குறி            - தருகின்ற

4. பொழிகிற - குறிக்கோள்

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ


II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ________________

விடை : வெ.இராமலிங்கனார்


2. ________________ என்றழைக்கப்படுபவர் வெ.இராமலிங்கனார்

விடை : காந்தியக் கவிஞர்


3. நோன்பு என்னும் பொருள் தரும் வேறொரு சொல் ________________

விடை : விரதம்


4. ________________ நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்

விடை : தமிழ்மொழி


5. எங்கள் தமிழ் மொழி ________________ போன்ற மொழியாகும்.

விடை : தேன்


III. வினாக்கள்

1. நாமக்கல் கவிஞரின் பன்முகத்தன்மையினை எழுதுக ?

தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்


2. நாமக்கல் கவிஞரின் படைப்புகள் யாவை?

★ மலைக்கள்ளன்

★ சங்கொலி

★ என்கதை

★ நாமக்கல் கவிஞர் பாடல்கள்.


3. நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக

இயற்பெயர் – வெ.இராமலிங்கனார் 

சிறப்பு பெயர் – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர்

பன்முகத்தன்மை- தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

படைப்புகள் – மலைக்கள்ளன், சங்கொலி, என்கதை, நாமக்கல் கவிஞர் பாடல்கள்.