ராணி அவந்திபாய்

Rani Avantibai.!

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

Bright Zoom Tamil,



ராணி அவந்திபாய்.!

ராணி அவந்திபாய் (இறப்பு : மார்ச் 20, 1858 ) ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங், தனது மனைவி அவந்தி பாய் அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். இவர் மத்தியபிரதேசத்தில் இளவரசியாக இருந்தார் லோதீ என்னும் ராஜ்புத் வகுப்பை சேர்ந்தவர். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிசும் இல்லாத நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.


2001-ஆம் ஆண்டு இந்தியத் தபால் தலை ஒன்றில் அவந்தி பாய்

மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி,தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வீரமரணமடைந்தார்.