ஆறாம் வகுப்பு  தமிழ் இலக்கணம் பகுதி - 1 

Class VI Tamil Grammar Section – 1

Bright Zoom Tamil,

1.தமிழ் மொழியின் இலக்கண வகைகளை கூறுக?

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் மொத்தம் ஐந்து வகை படும் அவை :

1. எழுத்து இலக்கணம்

2. சொல் இலக்கணம்

3. பொருள் இலக்கணம்

4. யாப்பு இலக்கணம்

5. அணி இலக்கணம்


2. எழுத்து இலக்கணம் என்றால் என்ன?

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.


3. குறில் எழுத்துக்கள்  எத்தனை ?

குறில் எழுத்துக்கள் எழுத்துக்கள் - 5 அவை

- அ, இ, உ, எ, ஒ


4. நெடில் எழுத்துக்கள் எத்தனை ?

நெடில் எழுத்துக்கள் - 7 அவை

- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,ஒள


5. மாத்திரை என்பது என்ன?

மாத்திரை இங்குக் அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கவோ, ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.


6. மாத்திரையின் கால அளவுகள்

அளவு - 1 மாத்திரை :

குறில் எழுத்தை ஒலிக்கும் கால 1 மாத்திரை


அளவு - 2 மாத்திரை

நெடில் எழுத்தை ஒலிக்கும் கால 2 மாத்திரை


அளவு -1/2 மாத்திரை

★ மெய்யெழுத்து ஒலிக்கும் கால அளவு -1/2 மாத்திரை

★ ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை


7. வல்லினம் எழுந்துகளை கூறு ?

வல்லினம் - க், ச், ட், த், ப், ற்


8. மெல்லினம்   எழுந்துகளை கூறு ?

மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்


9. இடையினம்  எழுந்துகளை கூறு ?

இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்


10. உயிர் மெய் யெழுத்துக்கள் என்றால் என்ன?

மெய் எழுத்துக்கள் 18 உடன்  உயிர் எழுத்துக்கள் 12-ம் சேர்வதால்  தோன்றும் எழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்துக்கள் எனப்படும். 

உயிர் மெய்யெழுத்து க்களையும்

1.உயிர்மெய்க்குறில், 

2. உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.

"கபிலர்" என்னும் சொல்லின்

மாத்திரை -கபிலர் = 1+1+1+1/2 = 32 மாத்திரை