காவலர் தேர்வு - 2023: பொது அறிவு வரலாறு டெல்லி சுல்தானியம் - பகுதி-1

Police (Constable)  Exam – 2023: General Knowledge History of Delhi Sultanate - Part-1

Bright Zoom Tamil,

குத்புதீன் ஐபக் டெல்லியில் கட்டிய இஸ்லாம் மசூதியின் பெயர் என்ன?

காவலர் தேர்வு - 2023

பொது அறிவு

டெல்லி சுல்தானியம் - 

பகுதி-1

1. 1206 இல் முகமது கோரியின் இறப்பிற்குப் பின்னர்இ அவரின் அடிமையான யார் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்?

- குத்புதீன் ஐபக்


2. அடிமை வம்சத்தை சார்ந்த மாபெரும் சுல்தான்கள் யாவர்?

- குத்புதீன் ஐபக் , சம்சுதீன் இல்துமி , கியாசுதீன் பால்பன்


3. குத்புதீன் ஐபக் அவருடைய தலைநகரமான லாகூரை எந்த நகருக்கு மாற்றினார்?

- டெல்லி


4. கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார்இ வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்? 

- பக்தியார் கல்ஜி


5. குத்புதீன் ஐபக் டெல்லியில் கட்டிய இஸ்லாம் மசூதியின் பெயர் என்ன?

- குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித்


6. போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து இயற்கை எய்தியவர் யார்?

- குத்புதீன் ஐபக்,


7. ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்படும் நிலத்தின் பெயர் என்ன? 

- இக்தா


8. தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி எது?

- பஞ்சாப்


9. குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை யார் நிறைவுசெய்தார்? 

- இல்துமி


10. யாருக்கு எதிராகக் கலகம் செய்ததால் வங்காள மாகாண ஆளுநராக இருந்த துக்ரில்கான் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்? 

- கியாசுதீன் பால்பனுக்கு


11. சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ------- என்ற சடங்கை நடத்தினர்.

- 'ஜவ்ஹர்" 


12. யாருடைய இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக டெல்லி சுல்தானியம் பல பகுதிகளை இழக்க நேரிட்டது? 

- அலாவுதீன் கில்ஜியின்

-  தொடரும்.......

Keywords :

Tnpsc Notes, History Notes, காவலர் தேர்வு - 2023, பொது அறிவு வரலாறு, டெல்லி சுல்தானியம்,