TN Police - காவலர் தேர்வு - 2023: பொதுத்தமிழ் - சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய செய்திகள்..!!

TN Police - Constable Exam - 2023: Important News about General Tamil - Silapathikaram..!!

காவலர் தேர்வு - 2023

பொதுத்தமிழ்


ஐம்பெருங்காப்பியங்கள் : 

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட 

1.சிலப்பதிகாரம், 

2. மணிமேகலை, 

3. குண்டலகேசி, 

4. வளையாபதி, 

5. சீவக சிந்தாமணி 

என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.

சிலப்பதிகாரம் 

★ சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.

★ சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் 'இரட்டைக் காப்பியங்கள்" என அழைக்கப்படுகின்றன.

★ இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்" எனவும் வழங்கப்படுகிறது.

★ இந்நூல் சேரஇ சோழஇ பாண்டிய மன்னர்களை பற்றியவை என்பதால் 'மூவேந்தர் காப்பியம்" எனவும் அழைக்கப்படுகிறது.

★ சிலப்பதிகாரம் முப்பது காதைகளை கொண்டது.

★ சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களை உடையது.

       ● 1. புகார்க் காண்டம்

       ● 2. மதுரைக் காண்டம்

       ● 3. வஞ்சிக் காண்டம்

'சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்புஇ அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.

★ இந்நூல் 'பொதுமைக் காப்பியம்", 'ஒற்றுமைக் காப்பியம்", 'வரலாற்றுக் காப்பியம்" எனவும் அழைக்கப்படுகிறது.

★ இயல்இ இசைஇ நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம் பெற்றுள்ளதால் 'முத்தமிழ்க் காப்பியம்" எனப்படுகிறது.

★ செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" எனப்படுகிறது.

★ சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் 'இளங்கோவடிகள்"

★ இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

★ இவர் 'சேர மன்னர்" மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.

★ தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு, முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.


சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுக்களும் நிறைந்தது. 

★ ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க, சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்" என்றும் கூறுவர்.

★ காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.

★ அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

★ முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் 'புரட்சிக் காப்பியம்" எனப்படுகிறது.

★ வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.