TNPSC  தேர்வு - 2023  பத்துப்பாட்டு நூல்களுள்: முல்லைப்பாட்டு மற்றும் மதுரைக்காஞ்சி..!!

TNPSC Exam - 2023 Pattuppattu Noolgalul: Mullaipatthu and Maduraikanji..!!

காவலர் தேர்வு - 2023 - பத்துப்பாட்டு நூல்களுள்:- முல்லைப்பாட்டு மற்றும் மதுரைக்காஞ்சி..!!

காவலர் தேர்வு - 2023

பொதுத்தமிழ்

பத்துப்பாட்டு நூல்கள் 

முல்லைப்பாட்டு:


👉 முல்லைப்பாட்டு -  பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.


👉 இந்நூலினை பாடிய புலவர் நப்பூதனார் ஆவார்.


👉 இது 103 அடிகளைக் கொண்டது.


👉 இந்நூல் அகப்பொருள் சார்ந்தது.


👉 முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் ஆனது.


👉 பத்துப்பாட்டிலே மிகவும் சிறிய நூல் முல்லைப்பாட்டாகும்.


👉 இந்நூல் கார்காலத்தைச் சிறப்பித்து கூறுகிறது.


👉 இந்நூல் முல்லைத்திணைக்குரிய கடவுளான திருமாலைப் போற்றித் தொடங்குகிறது.


👉 பத்துப்பாட்டில் இது ஒன்று மட்டும்தான் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.


👉 தலைவியை பிரிந்த தலைவன் வரும் வரையில் தலைவி காத்து இருப்பது முல்லைத்திணை ஆகும்.



மதுரைக்காஞ்சி:


👉 பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.


👉 இந்நூல் பத்துப்பாட்டில் மிகப் பெரிய நூல்.


👉 காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.


👉 மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.


👉 மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.


👉 இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.


👉 பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.


👉 இதன் பாவகை வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா.


👉 நாளங்காடி (பகல் நேரம்)இ அல்லங்காடி (இரவு நேரம்) பற்றிக் கூறுகிறது.


👉 'பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இந்நூல்இ 'கூடற்றமிழ்" என்றும் 'காஞ்சி பாட்டு" என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறுகின்றன. 


👉 பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும்இ வளத்தையும் கூறுகின்ற இந்நூல்இ அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.