தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் பகுதி 1

Freedom Struggle in Tamil Nadu -1

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சங்கம் எது? 

- சென்னைவாசிகள் சங்கம்

2. சென்னைவாசிகள் சங்கத்தை நிறுவியவர் யார்? 

- 1852 இல் லட்சுமி நரசு சீனிவாசனார்.

3. சித்திரவதை சட்டத்திற்கு எதிராக சித்திரவதை ஆணையத்தை நிறுவிய சங்கம் எது? 

- சென்னைவாசிகள் சங்கம்.

4. தேசியவாத பத்திரிகையிலும் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? 

- முத்துசாமி 1877

5. தி ஹிந்து என்னும் பத்திரிக்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

- 1878

6. தி ஹிந்து என்னும் பத்திரிக்கையை தொடங்கியவர் யார்? 

- சுப்பிரமணியம் மற்றும் அவர்களின் நண்பர்கள்

7. சுதேசமித்திரன் என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? 

- சுப்ரமணியம் 1891

8. சுதேசமித்திரன் என்னும் நாளிதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

- 1899

9. சுதந்திர போராட்டத்தின் போது சென்னையில் தொடங்கிய முக்கிய பத்திரிகைகள் யாவை? 

- இந்தியன் பேட்ரியாட், சவுத் இந்தியன் மெயில், மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், தேசாபிமானி, விஜயா, சூரியோதயம், இந்தியா

10. தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பட்ட தொடக்ககால அமைப்பு எது? 

- சென்னை மகாஜன சபை

11. சென்னை மகாஜன சபை நிறுவப்பட்ட ஆண்டு  எது?

- 1884 மே 16

12. சென்னை மகாஜன சபையை நிறுவியவர் யார்? 

- வீரராகவாச்சாரி அனந்தாசாரலு, T.ரங்கையா

13. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் யார்? 

- ரங்கையா நாயுடு

14. சென்னை மகாஜன சபையின் முதல் செயலர் யார்?

- அனந்தாசாரலு

15.    தொடக்க கால தேசியவாதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? 

- மிதவாதிகள்


16.    சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் யார்? 

- V S சீனிவாச சாஸ்திரி P Sசிவசாமி V கிருஷ்ணசமி T R வெங்கட்ராமனார் G.A நடேசன் T.M மாதவராவ் மற்றும் S.சுப்ரமணியனார்.

17.    பிரம்மஞான சபை மற்றும் சென்னை மகாஜன சபை கூட்டம் எப்போது நடைபெற்றது? 

- 1884

18.    இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? 

- 1885 பம்பாய் 

19.    இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டனர்? 

- 72 பேர் பதில் 22 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

20.    தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்த காங்கிரஸ் தொண்டர் யார்? 

- ஜி சுப்பிரமணியம்

21.  இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு எங்கு நடைபெற்றது? 

- 1886 கல்கத்தா

22.1886 கல்கத்தா தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்? 

- தாதாபாய் நவரோஜி

23.    இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது? 

- 1887 சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அல்லது மக்கிஸ் தோட்டம்

24.    1887 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்? 

- பக்ருதீன் தியாப்ஜி

25.    வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு எது? 

- 1905

26.    தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப் பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்புவதில் யாருடைய பாடல்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன? 

- சுப்ரமணிய பாரதி

27.    வ உ சிதம்பரனார் தொடங்கிய கப்பல் நிறுவனம் எது? 

- சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்

28.    வ உ சிதம்பரனார் இன் கப்பல் பெயர் யாது? 

- காலியா மற்றும் லாவோ

29.    சுதேசி கப்பல் நிறுவனம் எந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேற்கொண்டது? 

- தூத்துக்குடி மற்றும் கொழும்பு

30.    திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலை தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் யார்? 

- வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா

31.    கோரல் நூற்பாலை வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? 

- வ உ சிதம்பரனார்

32.    சிறையில் செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுபவர் யார்? 

- சிதம்பரனார்

33.    சுதேசி இயக்கத்தின் போது சிறை தண்டனையை தவிர்க்க பாரதியார் சென்ற இடம் எது? 

- பாண்டிச்சேரி

34.    பாரதியாரை தொடர்ந்து பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தவர்கள் யார்? 

- அரவிந்த் கோஷ், V.V. சுப்ரமணியனார்

35.    சுதேசி இயக்கத்தின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசியவாதிகள் பலருக்கும் புரட்சிகர நடவடிக்கைக்கான பயிற்சி எங்கிருந்து பெறப்பட்டது? 

- லண்டன் இந்தியா ஹவுஸ் மற்றும் பாரிஸ்

36.    சுதேசி இயக்க புரட்சிகர பயிற்சி பெற்றவர்கள் முக்கியமானவர்கள் யாவர்?

- எம் பி.டி ஆச்சார்யா வி.வி சுப்ரமணியனார் மற்றும் டி .எஸ்.எஸ் ராஜன்

37.    சுதேசி இயக்கத்தின் போது பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த செய்தித்தாள்கள் யாவை? 

- இந்தியா விஜயா சூர்யோதயம்

38.    பாரத மாதா சங்கம் நிறுவியவர் யார்? 

- நீலகண்ட பிரம்மச்சாரி 1904

39.    1911ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் W D E  ஆஷ் என்பவனை சுட்டுக்கொன்றவர் யார்? 

- மாவீரர் வாஞ்சிநாதன்

40.    மாவீரர் வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்ற இடம் எது? 

- மணியாச்சி ரயில் நிலையம்

41.    தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார்? 

- அன்னிபெசன்ட் அம்மையார் 1916

42.    அன்னிபெசன்ட் அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்? 

- அயர்லாந்து 

43.    ஆங்கில அரசிடம் தன்னாட்சி கோரிய இந்தியர்கள் யாவர்? 

- அருண்டெல், B.P வாடியா மற்றும் C.P.ராமசாமி

44.    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டி சிறந்தது என்று கூறிய புரட்சிகர சிந்தனையாளர் யார்? 

- அன்னிபெசன்ட் அம்மையார்

45.    அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய செய்தித்தாள் எது? 

- நியூ இந்தியா மற்றும் காமன்வீல்

46.    இந்தியா ஒரு தேசம் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? 

- அன்னிபெசன்ட் அம்மையார்

47.    விடுதலை பெற இந்தியா எப்படி துயருற்றது என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? 

- அன்னிபெசன்ட் அம்மையார்

48.    பத்திரிக்கைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

1910

49.    சுயாட்சி குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டவர் யார்? 

- அன்னிபெசன்ட் அம்மையார்

50.    அன்னிபெசன்ட் அம்மையார் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு எது? 

- 1917 இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் இவர் இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் ஆவார். சரோஜினி நாயுடு அவர்கள் இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் ஆவார்.

51.    தொழிற்சங்கம் அமைத்த தன்னாட்சி அமைப்பை சேர்ந்த உறுப்பினர் யார்?

-  B.P வாடியா

52.    பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து அவர்களை சாரணர் இயக்க குழுக்களாகவும் தொண்டர் குழுக்களாகவும் மாற்றி அமைத்த இயக்கம் எது? 

- தன்னாட்சி இயக்கம்

53.    சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 

- 1912

54.    சென்னை திராவிடர் கழகத்தின் முதல் செயலர் யார்? 

- C.நடேசனார்

55.    பிராமணரல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்கம் தங்கும் விடுதியை நிறுவியவர் யார்? 

- சி.நடேசனார் 1916

56.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? 

- 1916 விக்டோரியா அரங்கு

57.    தென்னிந்திய நல உரிமை சங்கத்தை நிறுவியவர் யார்? 

- தியாகராயர், T M நாயர்  சி.நடேசனார்

58.    தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆங்கில பத்திரிக்கை யாது? 

- ஜஸ்டிஸ்

59.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட தமிழ் பத்திரிகை யாது? 

- திராவிடன்

60.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட தெலுங்கு பத்திரிக்கை யாது? 

- ஆந்திரப் பிரகாசிகா