நான்காம் வகுப்பு தமிழ் நன்னெறி |Class IV Tamil Nanneri 

Bright Zoom Tamil,


4.நன்னெறி

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே பொன்செய் அதிர்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்

- சிவப்பிரகாச சுவாமிகள்


சொல் பொருள் :

★ இன்சொல் -இனிமையான சொல், 

★ இருநீர் வியனுலகம் - கடலால் சூழப்பட்ட பரந்த உலகம், 

★ வன்சொல்- கடுமையான சொல், 

★ அதிர்வளை - ஒலிக்கின்ற வளையல்,

★ அழல் கதிர் -  கதிரவனின் வெப்பக் கதிர்கள், 

★ தண்ணென் கதிர் - குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி


பாடல் பொருள் : 

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.


நூல் குறிப்பு : 

நீதிநூல்களுள் ஒன்று நன்னெறி இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமைமூலம், ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது, இந்நூலின் சிறப்பாகும்.


வாங்க பேசலாம் :

பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க.

உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?


சிந்திக்கலாமா?

இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!


சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

01 'இன்சொல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இன்+ சொல்

ஆ) இனிமை + சொல் √ 

இ) இன்மை + சொல்

ஈ) இனிய+ சொல்


02 "அதிர்கின்ற வளை " - இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்

அ) உடைகின்ற

ஆ) ஒலிக்கின்ற √

இ) ஒளிர்கின்ற

ஈ) வளைகின்ற


03 வியனுலகம் -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வியன் + உலகம் √

ஆ) வியல் + உலகம்

இ) விய + உலகம்

ஈ) வியன் + னுலகம்


வினாக்களுக்கு விடையளிக்க ;

01 உலகம் எப்போது மகிழும்? - நன்னெறிப் பாடல்மூலம் உணர்த்துக?

உலகில் உள்ள மக்கள் இன்சொல் பேசுவதால் மகிழும்.


02 கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்?

கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.


பொருத்துக :

1. இன்சொல்     - கதிரவனின் ஒளி  4

2. வன்சொல்     - நிலவின் ஒளி   3

3. அழல்கதிர்     - கடுஞ்சொல்   2

4. தண்ணென்  - கதிர் இனிய

 சொல்  1


குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக: 

1 நமது தாய்நாட்டின் திருப்பெயர்

(இ) ந் தி யா

2 அரசனின் வேறு பெயர் 

- ம (ன்) னன்

3 உடைமையை இப்படியும் சொல்லலாம்.  - (சொ) த்து

4 மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது 

- ம (ல்) லிகை 

வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக

இன்சொல்

இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்

#Bright_Zoom_Tamil,

#4TH_std, 

#Tamil_Book,

#Tamil, 

#Nanneri,