ஏலாதி வினா - விடைகள்!

Elati Question - Answers!

Bright Zoom,

Bright Zoom,

ஏலாதி வினா விடைகள்!

ஏலாதி :

ஏலம் + ஆதி = ஏலாதி ஆகும்.

ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு,. திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருளால் ஆனது.

ஏலாதியின் உருவம் :

ஆசிரியர் = கணிமேதாவியார்.

பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80.

பாவகை = வெண்பா.

பெயர்க்காரணம் :

ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்றுஇந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

பொதுவான குறிப்புகள் :

இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலைநூற்றைம்பது.

உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.

நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்.

கனி மேதாவி என்ற சொல்  இவர் சோதிடத்தில்  வல்லவர் என்பதை உணர்த்துகிறது.  

இந்நூல்  மகடூஉ  முன்னிலை அமைப்பை கொண்டது.

தமிழுக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.

அருகன் வணக்கம் சொல்லி நூலை தொடங்குவதால் சமணராக இருக்கலாம். 

மேற்கோள் :

தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி. வாய்இழந்தவாழ்வினர், வணிகம் போய்இழந்தார்                 கைத்தூண்பொருள் இழந்தார் கண் இலவர்க்கு ஈந்தார். வைத்து வழங்கிவாழ்வார்.

சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது. மேவல் எளிது; அரிது மெய்போற்றல்.


1. ஏலாதி நூலின் ஆசிரியர் யார;?

 - கணிமேதாவியார;


2. மருத்துவப் பெயர் அல்லது ஏலத்தை முதன்மையாக உடைய நூல் எது? 

- ஏலாதி


3. ஏலாதி எந்த நூற்றாண்டைச் சார;ந்த நூலாகும்? 

- ஐந்தாம் நூற்றாண்டு


4. ஏலாதியில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

 - 81


5. நான்கு அடியில் ஆறு அறக்கருத்துக்களை கூறும் நூல் எது?

 - ஏலாதி



6. ஏலாதியின் சிறப்பு தமிழரின் ----------- போன்ற இலக்கியம் ஆகும். 

- அருமருந்து


7. உணவு கொடுப்பதே உயர;வான அறம் எனக் கூறும் நூல் எது? 

- ஏலாதி


8. ஏலாதி என்பதன் பொருள் யாது?

 - ஏலத்தை முதலாக உடையது


9. ஏலாதி சமண சமயத்திற்கே உரிய ------------ முதலிய அறக்கருத்துகளை வலியுறுத்துகிறது.

 - கொல்லாமை


10. கற்போரின் அறியாமையை அகற்றும் நற்கருத்துக்களைக் கொண்டுள்ள நூல் எது?

 - ஏலாதி