அளவீடுகளும் அளவீட்டு முறைகளும்..!

Measurements and Measurement Methods

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,

SI அலகு முறை (அல்லது )பன்னாட்டு அலகு முறை :


1971 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவுகள் பற்றிய பொதுக் கூட்டமைப்பு
கூடியது. இதில் அனைவரும் ஒரே சீராகப் பயன்படுத்தத்தக்க அலகு முறையாக SI அலகு முறை அறிவிக்கப்பட்டது. 

SI அலகு முறையில் பல்வேறு அளவுகளுக்காக அலகுகள் நிலையாக வரையறுக்கப் பட்டுள்ளன. 

மேலும், 
இம்முறை மற்ற அலகு முறைகளைவிடச் சிறப்பானதாகும். இது அணுப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தது. எனவே, காலத்தைப் பொருத்து மாறாதது. 

மேலும், இது பயன்படுத்துவதற்கு மிக எளியது.

SI அலகு முறை ஏழு அடிப்படை அளவுகளையும், பல வழி அளவுகளையும் உள்ளடக்கியது.

நீளம், நிறை, காலம் ஆகியவற்றின் அலகுகளைப் பற்றி நாம் அறிவோம்.
தற்போது மேலும் சில அடிப்படை அளவு களின் அலகுகளைத் தெரிந்துகொள்வோம்.

வெப்பநிலை :

ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது
என்பதைக் குறிப்பதே அப்பொருளின் வெப்பநிலை என்பதை நாம் அறிவோம்.
வெப்பநிலையை அளவிட செல்சியஸ், பாரன்ஹீட் போன்ற அளவீட்டு முறைகள்
பயன்படுத்தப்படுகின்றன.

கெல்வின் அளவீட்டு முறை :


கெல்வின் அளவீட்டு முறை என்பது வெப்பநிலையை அளவிடும் மற்றொரு
அளவீட்டு முறையாகும். SI முறையில் வெப்பநிலையின் அலகு கெல்வின் ஆகும்.

நீரின் உறைநிலை :


நீரின் உறைநிலை செல்சியஸ் அளவீட்டில் 0°C. ஆனால் அந்த வெப்பநிலையில்
நீரின் மூலக்கூறுகள் இயக்கத்திலேயே இருக்கின்றன. அவை -273°C தான்
ஒய்வு நிலையை அடைகின்றன. எனவே -273°C என்பது தனிச்சுழி
வெப்பநிலையாகும். அதுவே கெல்வின் வெப்பநிலையில் கீழ்த்திட்டவரையாகக்
கொள்ளப்படுகிறது. எனவே,
-273°C = 0 K
0°C = 273 K
மேலும் செல்சியஸ் அலகுமுறையில் உள்ள எதிர்க்குறி வெப்பநிலை கெல்வின் அலகில் தவிர்க்கப்படுகிறது.

வெப்பநிலை அளவீட்டு முறைகளை மாற்றுதல் பாரன்ஹீட் அளவீட்டினை செல்சியஸ் அளவாக மாற்றுதல் மேல்திட்ட, கீழ்த்திட்டவரைகளுக்கு இடையேயுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை செல்சியஸ் அளவுகோலில் 100 ஆகவும், பாரன்ஹீட் அளவுகோலில் 180 ஆகவும் உள்ளது. 

எனவே,

C/100 = F -32/180
C = (F-32) X 100/180
c= (F-32) x5/9

இதைப் பயன்படுத்தி பாரன்ஹீட்
அளவீட்டினைச் செல்சியஸாக மாற்றலாம்.

இதேபோல் செல்சியஸ் அளவீட்டினைப்
பாரன்ஹீட்டாக மாற்ற
(F-32) = 2 x 180/100
(F-32) = 90
F= 90 + 32

கெல்வின் அளவீட்டினைச் செல்சியஸ்
அளவாக மாற்றுதல்
-273°C = 0 K
0°C = 273 K
100°C =373 K

SI அலகு முறையில் பின்பற்ற வேண்டிய மரபுகள் :

1. அலகுகளின் குறியீடுகளைக் குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் எழுத சிறிய
எழுத்தைப் பயன்படுத்தப்படவேண்டும். எ.கா. மீட்டர் என்பதை m என்றும்,
கிலோகிராம் என்பதை kg என்றும் எழுதவேண்டும்.

2.அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் உள்ள அலகுகளின் குறியீட்டை ஆங்கிலத்தில்
எழுத பெரிய எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். எ.கா. N-Newton, W Watt

3.அறிவியல் அறிஞர்கள் பெயர் கொண்ட அலகுகளை ஆங்கிலத்தில் முழுமையாக
எழுதும்போது சிறிய எழுத்தால் எழுத வேண்டும். எ.கா. newton, joule, watt.
எழுதவேண்டும்.

4. குறியீடுகளைப் பன்மையில் எழுதக் கூடாது. எ.கா 30 kg, 30 kilogram என
5. நிறுத்தக் குறியீட்டை அலகுகளின் முடிவில் பயன்படுத்தக்கூடாது. எ.கா m. என்று எழுதக்கூடாது m என எழுதவேண்டும்.

பின்வரும் அலகு மாற்றங்கள் தேர்வு நோக்கத்திற்காக அல்ல நினைவிற்க்காக....


நீளத்தின் அலகுகள் :


10 மி.மீ. 1செ.மீ.
10 செ.மீ = 1டெசி.மீ
10 டெசி.மீ 1மீ = 100 செ.மீ
10 மீ) 1டெகா.மீ
10 டெகா.மீ = 1ஹெ.மீ = 100 மீ
10 ஹெ.மீ = 1கி.மீ = 1000 மீ.

மி.மீ-மில்லிமீட்டர், செ.மீ- செண்டிமீட்டர்,
ஹெ.மீ ஹெக்டா மீட்டர், கி.மீ கிலோமீட்டர்

நிறையின் அலகுகள் :

10 மி.கி = 1 செ. கி
10 செ. கி = 1டெசி. கி
10 டெசி. கி = 1கி = 1000= மி. கி
10 கி 1டெகா. கி
10 டெகா. கி 1ஹெ. கி = 100கி
10 ஹெ. கி 1கி.கி = 1000 கி
1000 கி.கி = 1மெகா. கி = 1மெட்ரிக் டன்
ஹெ.கி ஹெக்டாகிராம், கி.கி கிலோகிராம்
மி.கி மில்லி கிராம், செ.கி செண்டி கிராம்,

திரவப் பருமனின் அலகுகள் :


10 மி.லி = 1 செ. லி.
10 செ, லி. = 1டெசி. லி = 100மி.லி
10 டெசி. லி 1லி = 1000 மி. லி.
10 லி 1டெகா. லி
10 டெகா. லி = 1ஹெ. லி = 100 லி
10 ஹெ. லி. = 1கி. லி = 1000 லி

மி.லி மில்லி லிட்டர், செ.லி-செண்டி லிட்டர்,
ஹெ.லி-ஹெக்டா லிட்டர், கி.லி- கிலோ லிட்டர்,

பரப்பின் அலகுகள் :

100 ச.மி.மீ = 1ச.செ.மீ
100 ச.டெசி.மீ = 1ச.மீ.
100 ச.செ.மீ = 1ச.டெசி.மீ
100 ச.மீ) = 1ச.டெகா.மீ =1 ஏர்
100 ச.டெகா.மீ = 1ச.ஹெ.மீ =1 ஹெக்டேர்
100 ச.ஹெ.மீ = 1ச.கி.மீ

ச.மி.மீ சதூ மில்லி மீட்டர், ச.செ.மீ சதுர சென்டிமீட்டர், ச.டெசி.மீ சதூ டெசிமீட்டர், ச.மீ சதுர மீட்டர்,
ச.ஹெ.மீ சதூ ஹெக்டாமீட்டர்

மேலும் அறிந்து கொள்வோம் :


நமது அன்றாட வாழ்வில் வழக்கத்தில் உள்ள சில அளவீட்டுச் சொற்கள்

1 அடி = 30.48 செ.மீ.
1 சதுர அடி = 30.48 செ.மீ ஒ 30.48 செ.மீ
= 929.0304 சதுர செ.மீ.
1 கிரவுண்ட் = 2400 சதுர அடி
1 குழி = 145.2 சதுர அடி
1 செண்ட் = 435.60 சதுர அடி
1 ஏக்கர் = 43560 சதுர அடி = 300 குழி = 100 செண்ட்

நடைமுறையில் இவற்றின் முழுமைப்படுத்தப்பட்ட மதிப்புகளே பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் கல்வி தகவல்களுக்கு